இன்னும் என்ன தூக்கம்? ஆழ்ந்த நித்திரையில் இருந்த பெண்ணுக்கு யானை கொடுத்த ஷாக்
பெண் ஒருவர் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் போது, யானை வந்து அவரை எழுப்பியுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தாய்லாந்தில் சொகுசு விடுதி
தாய்லாந்தில் அதிகளவில் யானை இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான், தாய்லாந்தில் சியாங்க்மய் என்கிற பகுதியில் ஒரு சொகுசு விடுதி செயல்பட்டு வருகிறது.
அங்கு ஒரு அறையில் பெண் ஒருவர் தூங்கிக்கொண்டு இருக்கிறார், அவரை ஜன்னல் வழியாக ஒரு யானை வந்து அதன் தும்பிக்கை மூலமாக எழுப்பிவிடுகிறது. நமக்கு பார்ப்பதற்கு பயமாக தெரிந்தாலும் அந்த பெண் மிக சாதாரணமாக அதனை எடுத்துக்கொள்கிறார்.

ஸாக்ஷி ஜெய்ன் எனும் பெயர் கொண்ட அந்த பெண் இதனை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இதுகுறித்து அவர் தனது வலைதள பக்கத்தில் கூறுகையில், இந்த விடுதியில் அலாரமாக யானைகளை கொண்டு விருந்தினர்களை எழுப்பிவிட செய்கின்றனர்.
இங்கு யானைகளுடன் நீங்கள் விளையாடலாம், சாப்பாடு கொடுக்கலாம், நடக்கலாம், குளிக்கலாம் உங்களுக்கு விருப்பப்படி இருக்கலாம். இது ஒரு வித்தியசமான அனுபவமாக இருந்தது, அடுத்த முறை நீங்கள் தாய்லாந்து வந்தால் சியாங்க்மய் வந்து பாருங்கள் என்று கூறியுள்ளார்.