viral video: யானை vs யானை... நடு வீதியில் ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் காட்சி!
இரண்டு யானைகள் ஆக்ரோஷமான மோதிக்கொள்ளும் பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
பொதுவாக தரைவாழ் உயிரினங்களில் மிக பெரிய தோற்றத்தை கொண்டுள்ளது யானைகள் தான். யானைகள் உருவத்தில் மிகப்பெரியதாக இருந்தாலும் அவை செய்யும் சேட்டைகள் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கும் வகையில் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால், யானைகள் தனக்கே உரிய பல்வேறு சிறப்பான அம்சங்களையும் கொண்டுள்ளது. அவற்றின் சில வித்தியாசமாக பண்புகள் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கும்.
குறிப்பாக யானைகள் முக்கியமாக பெண் யானையை ஈர்க்கவும், தனது பலத்தை நிரூபிக்கவும், மற்ற ஆண் யானைகளுடன் சண்டையிடும் பழக்கத்தை கொண்டிருக்கின்றது.
மேலும் மஸ்த் எனப்படும் சிறப்பு ஹார்மோன் மாற்றங்கள் நிகழும் காலங்களில், ஆண் யானைகள் ஆக்ரோஷமாக நடந்து சண்டையிடுவதை பார்க்க்கூடியதாக இருக்கும்.
அந்தவகையில் இரண்டு யானைகள் நடு வீதியில் மிகவும் ஆக்ரோஷமான சண்டையிடும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வெளியாகி பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |