கோவிலில் நுழைந்த யானை - கடவுளைப் பார்த்து மண்டியிட்டு வணங்கிய நெகிழ்ச்சி வீடியோ!
கோவிலில் நுழைந்த யானை ஒன்று அங்கிருந்த தெய்வ சிலையைப் பார்த்து, மண்டியிட்டு வணங்கிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மண்டியிட்டு வணங்கிய யானை
யானை என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது கம்பீரம். ஆனால், என்னதான் கம்பீரமான விலங்காக இருந்தாலும் அவை குழந்தைப் போல் சில சேட்டைகளும் செய்யும். குட்டி யானைகள் செய்யும் சேட்டைகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்து விடுகின்றன.
குட்டி யானைகள் முதல் தாய் யானைகள் வரை வெவ்வேறு வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடுகின்றன.
அதேபோல் தற்போது ஒரு வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
குஜராத் மாநிலம், கமசாவில் உள்ள புனித பார்ஷ்வநாத் கோயிலில் ஒரு யானை உள்ளே புகுந்தது. கோவிலில் புகுந்த யானை திடீரென்று கோவிலில் இருந்த தெய்வ சிலைகளை பார்த்து மண்டியிட்டு வணங்கினது.
பின்னர், தன் தும்பிக்கை உயர்த்தி தெய்வ சிலையைப் பார்த்து பக்தியோடு கும்பிட்டது. தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடா... தனித்துவமான யானையாக உள்ளதே... இதை என்னால் நம்பவே முடியவில்லை... யானைக்கு இப்படி ஒரு பக்தியா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ -
Amazing sight! An elephant finds refuge at the sacred Parshwanath Temple in Khamasa, Gujarat. This unique video showcases the incredible devotion of animals towards divine entities. Truly mesmerizing! ?? #Gujarat #India #LordParshwanath #Elephant #Devotion #Jainism #Culture… pic.twitter.com/RjaueHkfTe
— Dr Ravi Kiran Yadav (@drravikiran9) May 27, 2023