என்னை திட்டுறாங்க... - யானையிடம் கெத்து காட்டிய ஆசாமி குமுறல் - நடந்தது என்ன?
என்னை வீட்டில் எல்லாரும் திட்டுறாங்க என்று யானையிடம் கையெடுத்து கும்பிட்டு கெத்து காட்டிய ஆசாமி கவலையோடு தெரிவித்துள்ளார்.
யானையிடம் கெத்து காட்டிய ஆசாமி
சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒகேனக்கல் பகுதியில் மரக்கிளைகளை ஒடித்து தின்றபடி பசிவெறியோடு நின்றிருந்த காட்டு யானை ஆக்ரோஷமாக சாலையில் வரவே, அங்கிருந்த வாகன ஓட்டிகள் அப்படியே நின்று விட்டனர். சிலர் காட்டு யானைப் பார்த்து தெறித்து ஓடினர். அப்போது ஒரு ஆசாமி தைரியத்தோடு யானை முன்பு சென்றார்.
யானையை கையெடுத்து கும்பிட்டு சாமி... இந்த பக்கம் வராதீங்க... அப்படியே நகர்ந்து உள்ளே போயிடுங்க... என்று தரையில் விழுந்து வணங்கினார். ஆனால், யானை ஒரு நிமிடம் ஆக்ரோஷத்தோடு கத்தி அப்படியே நின்றது. இவர் கையெடுத்து கும்பிட அந்த யானையும் யாரையும் ஒன்று செய்யாமல் அப்படியே பின்னால் நகர்கிறது. தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலானது.
ஆனால், இந்த வீடியோவை வைரலானதையடுத்து, அந்த ஆசாமி பென்னாகரத்தைச் சேர்ந்த மீசை முருகேசன் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவரை காவல்நிலையத்திற்கு கொண்டு வந்தனர். வழக்குப் பதிவு செய்ததோடு அல்லாமல், ரூ.10,000 ரூபாய் அபராதமும் விதித்தனர்.
ஒருவழியாக அபராத பணத்தை கட்டிவிட்டு வெளியே வந்த முருகேசன் பேசுகையில், என்ன நடந்ததே எனக்கு தெரியல. நன்றாக குடித்திருந்தேன். அப்போ நல்லா குடிச்சிருந்தேன். யானை ஏதும் என்னை செய்யாது என்ற நினைப்பில் யானையிடம் சென்றுவிட்டேன்.
எனக்கு சின்ன வயசுல இருந்தே கடவுள் பக்தி அதிகம். உனக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சி'ன்னு என்னை வீட்டில் இருக்கிறவர்கள் திட்டிறாங்க. ஆனா... என் வீடியோவை உலகமே பார்த்திருக்கு. நான் உலக சாதனைதான் படைத்து விட்டேன். ரொம்ப பெருமையாக இருக்கு. இது போதும் எனக்கு என்றார்.
Ever seen anything like this in front of an elephant? Unbelievable..#WA pic.twitter.com/Fa54mkAhOe
— Kiran Kumar S (@KiranKS) May 11, 2023