தண்ணீர் பாட்டிலை எடுத்து யானை செய்த செயல் - வியந்து போன நெட்டிசன்கள்
பாட்டிலை எடுத்து யானை செய்த செயலின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பாட்டிலை எடுத்து யானை செய்த செயல்
யானை என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது கம்பீரம். ஆனால், என்னதான் கம்பீரமான விலங்காக இருந்தாலும் அவை குழந்தைப் போல் சில சேட்டைகளும் செய்யும்.
குட்டி யானைகள் செய்யும் சேட்டைகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்து விடுகின்றன.
குட்டி யானைகள் முதல் தாய் யானைகள் வரை வெவ்வேறு வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடுகின்றன.
அதேபோல் தற்போது ஒரு வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
வனப்பகுதிக்கு சில சுற்றுலா பயணிகள் தங்கள் கொண்டு வந்த பாட்டிலை கவனக்குறைவாக விட்டுச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு வந்த யானை ஒன்று பிளாஸ்டிக் பாட்டிலை நசுக்கி அதிலிருந்து வந்த தண்ணீரை எடுத்து உட்கொண்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த யானை அந்த பிளாஸ்டிக் பாட்டிலை உட்கொள்ளவில்லை.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் இனிமேலாவது யாராவது தண்ணீர் பாட்டிலை கொண்டு சென்றால் தூக்கி வீசிவிட்டு வராதீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Some tourists were careless with their bottle. thankfully the elephant did not ingest any plastic. It was trying to get water out of it as you can see. pic.twitter.com/WreHtWyswI
— Amoghavarsha (@amoghavarshajs) May 19, 2023