கீழே இருந்த குப்பையை எடுத்து குப்பைத்தொட்டியில் போட்ட யானை - வைரலாகும் வீடியோ
கீழே இருந்த குப்பையை எடுத்து குப்பைத்தொட்டியில் போட்ட யானையின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குப்பையை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்ட யானை
சிலர் நடந்துச் செல்லும்போது கண்ணுக்கு குப்பைகளை சாலையில் பார்ப்பார்கள். ஆனால், அதை எடுத்து குப்பைத் தொட்டியில் போடும் எண்ணம் நமக்கு வராது.
கீழே குப்பையை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டால் என்னவோ தன்மானப் பிரச்சினை என்று நினைத்து கொள்வார்கள். அப்படி நாம் குப்பையை எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டால், யாராவது பார்த்துவிட்டால், நம்மை என்ன நினைப்பார்கள் என்று பார்த்தும் பார்க்காதது போல் சென்று விடுவார்கள்.
அதேபோல் சிலர் நடந்து சென்றுக்கொண்டிருக்கும் போது சாப்பிட்டுக் கொண்டு செல்வார்கள். சாப்பிட்டு முடித்த கவரை குப்பைத்தொட்டியில் போடாமல் அப்படியே கீழே போட்டுவிட்டுச் செல்வார்கள்.
மனிதனை விட 5 அறிவு கொண்ட விலங்குகளுக்கு இருக்கும் குணங்கள் கூட மனிதனாகிய நம்மிடம் காணமுடிவதில்லை.
தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
ஒரு யானை நடந்து வந்துக்கொண்டிருந்தது. அப்போது, கீழே இருந்த குப்பையை பார்த்தது. உடனே குப்பைகளை தன் தும்பிக்கையால் எடுத்து அழகாக குப்பைத் தொட்டிக்குள் போட்டது.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் யானைக்கு இருக்கும் அறிவு கூட சில மனிதர்களுக்கு இருப்பதில்லை என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Elephant caught throwing away litter into a trash can at a safari outpost pic.twitter.com/5kOFx3oFLj
— Interesting As Fuck (@InterestingsAsF) May 6, 2023