கொட்டும் மழையில் குட்டியை ஈன்றெடுத்த தாய் யானை - மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்த யானை கூட்டம்
கொட்டும் மழையில் குட்டியை ஈன்றெடுத்த தாய் யானையின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்த யானை கூட்டம்
நமக்கு யானை என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது கம்பீரம். ஆனால், என்னதான் கம்பீரமான விலங்காக இருந்தாலும் அவை குழந்தைப் போல் சில சேட்டைகளும் செய்யும். குட்டி யானைகள் செய்யும் சேட்டைகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்து விடுகின்றன.
குட்டி யானைகள் முதல் தாய் யானைகள் வரை வெவ்வேறு வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடுகின்றன.
ஒரு பெண் பிரவச வலியில் குழந்தை பெற்றெடுக்க மருத்துவமனையில் ஆபரேஷன் வார்டுக்கு உள்ளே சென்றதும், அப்பெண்ணின் கணவனும், உறவினர்களும் பதற்றத்தோடே இருப்பார்கள். குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும். மனைவிக்கு ஏதும் நடக்ககூடாது என்று கணவன் தவிப்பை சொல்லவே முடியாது. ஆனால், குழந்தை பிறந்த பிறகு கணவனும், அப்பெண்ணின் உறவினர்களும் மகிழ்ச்சியில் துள்ளி குதிப்பர்.
அதுபோல் இங்கு ஒரு சம்பவ நடந்தேறியுள்ளது. ஒரு கர்ப்பிணி யானை கொட்டும் மழையில் பிரவசத்தில் ஒரு குட்டி யானையை ஈன்றெடுக்கிறது. அப்போது, குட்டி யானை பிறந்தவுடன் யானைகள் கூட்டம் மகிழ்ச்சியில் கத்திக்கொண்டு அந்த குட்டி யானையை சூழ்ந்துக் கொண்டு ஆசீர்வதிக்கிறது. கொட்டும் மழை அந்தக் குட்டி மேல் விழாதவாறு பெரிய யானைகள் பாதுகாக்கின்றன.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே ஆச்சரியமடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Ainsi naquit l’éléphanteau …#elephantpic.twitter.com/9khXdIkZdt
— Bastian ? (@BastianGenicot) May 1, 2023