அடிக்கும் வெயிலில் குளத்தில் குளுகுளு குளியல் போட்ட யானை - வைரலாகும் வீடியோ
குளத்தில் ஆனந்த குளியல் போட்ட யானையின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆனந்த குளியல் போட்ட யானை
யானை என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது கம்பீரம். ஆனால், என்னதான் கம்பீரமான விலங்காக இருந்தாலும் அவை குழந்தைப் போல் சில சேட்டைகளும் செய்யும். யானைகள் செய்யும் சேட்டைகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்து விடுகின்றன. குட்டி யானைகள் முதல் தாய் யானைகள் வரை வெவ்வேறு வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடுகின்றன.
அப்படித்தான் தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு யானை அடிக்கும் வெயிலிலிருந்து தப்பிக்க, குளத்தில் இறங்கி ஆனந்த குளியல் போட்டுள்ளது. குளத்தில் உள்ளே மூழ்கி, மூழ்கி எழுந்து மகிழ்ந்துள்ளது.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் யானையின் ஆனந்த குளியலைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ -
Just an elephant having a whale of a time. Enjoy! pic.twitter.com/ZTyVATLabK
— Sangita (@Sanginamby) May 2, 2023