சண்டையிட்ட யானைகளை சமாதானப்படுத்திய பெரிய யானைகள் - வைரலாகும் வீடியோ
சண்டையிட்ட யானைகளை சமாதானப்படுத்திய பெரிய யானைகளின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சமாதானப்படுத்திய பெரிய யானைகள்
யானைகள் எப்போதும் சில நேரங்களின் மனிதர்களையே மிஞ்சு விடுகின்றன. வீட்டில் சிறுவர்களோ, கணவன்-மனைவியோ யாராவது சண்டையிட்டால், உடனே பெரியவர்கள் வந்து சண்டையை தீர்த்து வைத்து சமாதானப்படுத்துவார்கள்.
அது போல தான் ஒரு காட்டின் நடுவில் 2 குட்டி யானைகள் ஒன்றுடன் ஒன்று விளையாட்டுத்தனமாக சண்டையிடும் மிக அழகான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு பெரிய யானை சிறிய யானையை அந்த சண்டையில் வீழ்த்துவதைக் காண முடிகிறது. விஷயங்கள் தீவிரமடைவதற்கு முன், வயது வந்த யானைகள் அந்த இடத்தை அடைந்து இந்த சண்டையிலிருந்து தலையிடுகின்றன.
தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. வைரலாகும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் நான் சென்று அனைவரையும் கட்டிப்பிடித்து அவர்களுடன் விளையாட விரும்புகிறேன் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
When in cousins fight elders have to intervene. pic.twitter.com/TiCATz8uZ6
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) April 25, 2023