குழியில் விழுந்த குட்டியை மீட்க தாய் யானை நடத்திய பாசப்போராட்டம் - வைரலாகும் வீடியோ
குழியில் விழுந்த குட்டி யானையை மீட்க தாய் யானை நடத்திய பாசப்போராட்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தாய் யானை நடத்திய பாசப்போராட்டம்
ஒரு குழியில் உயிருடன் குட்டியானை சிக்கிக்கொண்டது. தன் குழந்தையை காப்பாற்ற தாய் யானை மிகவும் சிரமப்பட்டது. இதனையடுத்து தாய் யானை அந்த குழியில் குட்டியானைக்கு பால் கொடுப்பதற்காக மண்டியிட்டது.
தயக்கமின்றி ஆழமான குழியில் நீண்டநேரமாக மண்டியிட்ட தாய் யானையும் ஒரு கட்டத்தில் எழுந்திருக்க முடியாமல் சிக்கியது. தாய் யானையும், குட்டி யானையும் 3 நாட்களாக உயிருக்கு போராடியது.
இதனையடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக தாய் யானை உயிர் பிரிய ஆரம்பித்தது. அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக இது குறித்து வனத்துறையினரிடம் தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர் தாய் யானையையும், குட்டி யானையையும் மீட்க முயற்சி செய்தனர். தாய் யானை மூச்சற்ற நிலையில் மயங்கி கிடந்தது.
இந்த சம்பவத்தை பார்த்த அங்கிருந்தவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். ஒரு வழியாக மீட்புக் குழுவினர் அந்த தாய் யானைக்கு முதலுதவி செய்து உயிரை காப்பாற்றினர். தாய் யானைக்கு உயிர் வந்ததும் அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர்.
தாய் யானையும், குட்டி யானையும் சிறிது நேரத்திற்கு பிறகு கடந்து சென்றபோது, திடீரென்று தாய் யானை உயிரை காப்பாற்றியவர்களை திரும்பி ஒரு கனம் பார்த்தது. ஏதோ நன்றி சொல்வது போல் இருந்தது. பிறகு, அங்கிருந்து தன் குட்டியை அழைத்துக் கொண்டு காட்டுக்குள் சென்று மறைந்தது.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே கண் கலங்கி கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் மீட்புக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ -
The maternal instincts of this elephant are truly inspiring as she selflessly sacrifices herself to protect her baby? pic.twitter.com/yTnUlR9FCN
— Tansu YEĞEN (@TansuYegen) April 23, 2023