ஒத்தையடிப்பாதையில் ஒய்யாரமாக நடந்து வந்த காட்டு யானை! என்ன ஒரு ஸ்டைய்லு... சூப்பர்!
காட்டில் யானை ஒன்று ஸ்டைய்லாக நடந்துவீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
இப்போதெல்லாம் சமூக வலைத்தளங்களில் மனதை கவரும் வகையில் எண்ணற்ற விலங்குகளின் வீடியோக்கள் வலம் வருகின்றன.
அவற்றில் யானைகளின் வீடியோக்களும் அடங்கும். மாபெரும் உருவம் கொண்ட விலங்குகள் செய்யும் சில சேட்டைகள் அதிகம் ரசிக்கத்தக்கவையாக இருக்கும்.
He seems to be a model among the elephants. Such a beautiful walk. pic.twitter.com/NfQD0PbJXG
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) June 10, 2021
அவை தண்ணீரில் குளிப்பது முதல் பிற யானைகளோடு விளையாடுவது, சில வளர்ப்பு யானைகள் செய்யும் குறும்புகள் என பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அந்த லிஸ்ட்டில் இப்போது மற்றொரு வீடியோவும் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவில் ஒரு யானையின் நேர்த்தியான மற்றும் மிகவும் ஸ்டைலான நடையை நீங்கள் பார்க்கலாம்.