படையப்பா பாணியில் ஸ்டைல் காட்டிய யானை! நொடிப்பொழுதில் நடந்த சோகம்
படையப்பாவில் நடிகர் ரஜினிகாந்தை போல ஸ்டைல் செய்த யானை அடுத்த நொடியே குப்புற விழுந்த வீடியோ சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.
இந்த வீடியோவுக்கு சிலர் படையப்பா திரைப்படத்தின் பிஜிஎம் கொடுத்து அசத்தியுள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
பகிரப்பட்ட ஒரு சில மணிநேரங்களிலேயே லட்சக்கணக்கானோர் இந்த வீடியோவை பார்த்தும், ரீட்வீட் செய்தும் இருக்கிறார்கள்.
குறித்த காட்சி எந்த வனப்பகுதி என்று தெரியவில்லை. அங்கு மூன்று யானைகள் சேர்ந்து மரத்தை ஒடித்து பழங்களையும், காய்கறிகளையும் பறித்து சாப்பிடுகின்றன.

அப்போது அவற்றில் ஒரு யானை, அங்கிருந்த பெரிய துணி போன்ற ஒன்றை எடுத்து ஸ்டைலாக தன் மீதே போட்டுக் கொள்கிறது. இதை பார்க்கும் போது படையப்பா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்வது போன்றே உள்ளது.
அந்தப் படத்தில் தனக்கே உரிய ஸ்டைலில் துண்டை எடுத்து ரஜினி தன் தோளில் போடுவார். அதுபோலவே தான் இந்த யானையும் தன் மீது துண்டை போட்டு அங்கிருந்து செல்கிறது.
ஆனால், அந்த துணி அதன் முகத்தை முற்றிலுமாக மறைத்ததால் எங்கு போகிறோம் எனத் தெரியாமல் பள்ளத்தில் கால் வைத்து 'பொத்' என கீழே விழுந்து பின் எழுந்து செல்கிறது.
அந்த யானை துணியை எடுத்து போடும் போது படையப்பா பிஜிஎம்-ஐ போட்டு, தெறிக்க விட்டுள்ளனர்.