Viral Video: யானை மனிதருக்கு நன்றி கூறி பார்த்ததுண்டா? நபர் செய்த உதவிதான் என்ன?
சாலையைக் கடந்த யானை ஒன்று கடைசியாக மனிதருக்கு நன்றி தெரிவித்து சென்ற காட்சி வைரலாகி வருகின்றது.
நன்றி தெரிவித்த யானை
விலங்குகளில் மிகவும் பெரியதும், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததும யானை ஆகும். யானையைப் பார்த்தாலே சிறுகுழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
உருவத்தில் மட்டுமே மிகப்பெரியதாக இருக்கும் யானை, குணத்தில் குழந்தை என்று தான் கூற வேண்டும். சில தருணங்களில் பாகன் வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படிந்து நடப்பதை நாம் அவதானித்திருப்போம்.
ஆனால் சில தருணங்களில் ஆக்ரோஷமாக தாக்கவும் செய்கின்றது. அது ஏனெனில் தனது ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற பத்தில் தான் மனிதரை தாக்கி தன்னை பாதுகாத்துக் கொள்கின்றது.
இங்கு வாகனம் சாலை ஒன்றில் நின்றுள்ள நிலையில், யானை கூட்டம் சாலையை கடந்து செல்கின்றது. யானைக்கு குறித்த வாகனமும் வழிவிட்டு காத்திருந்தது.
கடைசியாக யானை கூட்டம் அனைத்தும் சாலையினைக் கடந்த நிலையில், ஒரு யானை மட்டும் இறுதியாக வாகனத்தில் இருந்த நபருக்கு நன்றி தெரிவித்துள்ளது.
Last elephant says thanks 🐘🥺❤️ pic.twitter.com/EUs2N6Yj2A
— ALEX HOPPER (@iALEXHOPPER) August 1, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |