தண்ணீருக்குள் தத்தளித்த மான்! காப்பாற்ற கதறிய யானை: நெகிழ்ச்சி காட்சி
தண்ணீரில் தத்தளித்த மான் ஒன்றினைக் காப்பாற்ற கோரி உதவி கேட்ட யானையின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஆறறிவு படைத்த மனிதர்கள் மட்டுமே மற்றவர்களின் கஷ்டத்தினை அறிந்து உதவி செய்யும் என்ற பலரும் நினைத்துக் கொண்டிருக்க இங்கு யானை ஒன்றின் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
மத்திய அமெரிக்காவில் உள்ள நாடான கௌதமாலாவில் லா அரோரா என்ற உயிரியல் பூங்காவில் மான் ஒன்று தண்ணீரில் விழுந்து தத்தளிப்பதை அவதானித்த 60 வயது யானை ஒன்று உதவிக்கு மற்றவர்களை அழைத்துள்ளது.
யானையின் பிளிறல் சத்தம் கேட்டு வந்த பாகன் உடனே மானை காப்பாற்றி கரை சேர்த்துள்ளார். மான் கரைக்கு வந்த பின்னரே குறித்த யானையும் இயல்வு நிலைக்கு வந்துள்ளது. இக்காட்சி தற்பாது இணையத்தில் பார்வையாளர்களை நெகிழ வைத்துள்ளது.