மான் குட்டியை வேட்டையாட நினைத்த முதலை! காலால் நசுக்கி யானை கொடுத்த ஷாக்
வனப்பகுதி ஒன்றில் தண்ணீர் குடிக்க சென்ற மான் குட்டியை வேட்டையாடிய முதலையை காலால் நசுக்கி, அந்த குட்டியை யானை காப்பாற்றும் வீடியோ வைரலாகியுள்ளது.
குறித்த காட்சியில் உணவிற்காக தண்ணீருக்குள் பதுங்கியிருந்த முதலை, தண்ணீர் அருந்த வந்த மான் குட்டியை வேட்டையாட போராடியுள்ளது. அத்தருணத்தில் அங்கே நீர் அருந்த வந்த யானைக்கூட்டத்தில், ஒரு யானை மட்டும் இந்த சம்பவத்தை பார்த்து தனது காலால் முதலையை நசுக்கு பாடம் கற்பித்து கொடுத்துள்ளது.
யானையின் இந்த செயலால் மான்குட்டி தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டு எஸ்கேப் ஆகியுள்ளது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கிறது. யானைக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.