இளைஞர்களை ஓட ஓட விரட்டி தாக்கிய யானை! இலங்கை மக்களை வியப்பூட்டிய காணொளி
காட்டில் விளையாடச் சென்ற இளைஞர்களை ஓட ஓட விரட்டிய யானையின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இலங்கையில் நடந்த சோகம்
இலங்கையில், அனுராதபுரம் - யாழ்ப்பாணம் சந்திக்கும் பகுதியில் இளைஞர்களை காட்டுப்பகுதியொன்றிற்கு விளையாட சென்றுள்ளார்கள்.
இவர்கள் செல்லும் வழியில் யானையொன்று இருந்துள்ளது, ஏதற்காக யானை கோபம் கொண்டது என்று தெரியவில்லை, ஆனாலும் இளைஞர்களை விரட்ட ஆரம்பித்துள்ளது.
இதன்போது தப்பித்துக் கொள்வதற்காக அங்கிருந்த பெரிய மரம் ஒன்றில் ஏறியுள்ளார்கள். இதனால் கடுப்பான யானை மரத்தைச் சுற்றி சுற்றி மரத்தை வீழ்த்த முயற்சிக்கிறது.
காணொளியாக பரவிய சம்பவம்
இந்த சம்பவத்தை மரத்திலிருந்த இளைஞர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்கள்.
மேலும் இதனை பார்த்த இணையவாசிகள் “யானைக்கு இவ்வளவு கோபம் வர இவர்கள் என்ன செய்தார்கள் என தெரியவில்லையே” என சந்தேகிக்கும் விதமாக கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.