மனிதர்களை மிஞ்சிய பாசம்! ஒரு குட்டியை பாதுகாக்க இத்தனை யானைகளா?
மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளும் அன்பும் பாசமும் நிறைந்தவை. மனிதர்களுக்கு அடுத்தபடியாக அறிவில் சிறந்தவையாக யானைகள் கருதப்படுகின்றன.
சிறந்த அறிவுத் திறன் கொண்ட யானைகள் கருவிகளைப் பயன்படுத்த எளிதில் கற்றுக் கொள்கின்றன. பொதுவாக யானை பாச உணர்ச்சி கொண்டது.
ஐஎஃப்எஸ் அதிகாரி சுசந்த நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ, யானைகள் தங்கள் குட்டிகளைப் பாதுகாப்பாக எப்படி வைத்திருக்கிறது, எவ்வளவு அக்கறையுடன் இருக்கிறது என்பதை பற்றிய ஒரு பார்வையை அளிக்கிறது.
வயது முதிர்ந்த யானைகளின் கூட்டம் சாலையில் நடந்து செல்வதை வீடியோவில் காணலாம். கவனமாகக் கவனித்து பார்த்தால், ஒரு குட்டி யானையை யானை கூட்டத்தின் கால்களின் நடுவில் யானைகளுடன் ஓடுவதைக் காண முடியும்.
"புதிதாகப் பிறந்த அழகான குட்டி யானைக்கு யானைக் கூட்டத்தை விட சிறந்த பாதுகாப்பை பூமியில் வேறு யாராலும் வழங்க முடியாது. இது Z+++ பாதுகாப்பு. சத்தியமங்கலம் கோயம்புத்தூர் சாலையில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது," என்ற எழுதி அவர் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
No body on earth can provide better security than an elephant herd to the cute new born baby. It’s Z+++.
— Susanta Nanda IFS (@susantananda3) June 22, 2022
Said to be from Sathyamangalam Coimbatore road. pic.twitter.com/iLuhIsHNXp