தாய் யானைகள் தனது குட்டியை எப்படி வளர்க்கும் தெரியுமா?
தாய் யானைகள் தங்களது குட்டியை எவ்வாறு வளர்க்கும் என்ற சுவாரசிய தகவலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
யானை
உலகில் பல்லாயிரகணக்கான எண்ணிக்கையில் யானைகள் இருந்தாலும், அவை அனைத்தும் இரண்டு வகையை சேர்ந்தவை. ஒன்று ஆசிய யானைகள்; மற்றொன்று ஆஃப்ரிக்க யானைகள்.“
பெண் ஆசிய யானைகளுக்கு தந்தம் இருக்காதாம். யானை குட்டியானது பிறக்கும் போது 200 பவுண்டு எடை இருக்குமாம். இந்த எடையானது 30 பிறந்த குழந்தைகளின் எடைக்கு சமமாம்.
கண் இமைகளைக் கொண்டிருக்கும் யானைகளுக்கு பிடிக்காத ஒரே உயிரினம் என்றால் அது தேனீ தானாம்.
அதாவது மனித உடம்பில் இருக்கும் சதையை விட யானையின் தும்பிக்கை அதிக சதையை கொண்டுள்ளதாம்.
22 மாதங்கள் கர்ப்பமாக இருந்து யானைகள் குட்டியை ஈன்றெடுக்குமாம். அதே போன்று யானையின் தந்தை ஒருமுறை உடைந்துவிட்டால் மறுபடியும் வளராதாம்.
image: Shutterstock
யானை குட்டிகளை எப்படி வளர்க்கும்?
யானைகளின் குழந்தை பிறப்பும், வளர்ப்பும் மிகவும் சிக்கலானதே. யானைகள் தங்கள் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்து வளர்ப்பதுடன், ஒரு உணர்ச்சிப் பிணைப்பை குழந்தைகளிடம் ஏற்படுத்துகின்றது.
யானைக் கூட்டங்களில் குழந்தை வளர்ப்பு என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாதாம். குடும்பமாகவும் மற்றும் ஒரு சமூகமாகவும் சேர்ந்து குழந்தை வளர்ப்பில் ஈடுபடுகின்றதாம்.
யானைகள் மொத்தமாக சேர்ந்தே குட்டிகளை வளர்ப்பில் ஈடுபடுவதுடன், குட்டிகளுக்கு உயிர் வாழ்வதற்கான அனைத்து விடயங்களையும் கற்றுக்கொடுத்து விடுமாம்.
அதே போன்று குட்டிகளும் தாங்கள் வளரும் பருவத்தில் அதிகமான சவால்களை எதிர்கொள்கின்றதாம்.
Cocoparisienne/Pixabay
குட்டிகளை வளர்ப்பதில் பொறுமை மற்றும் புரிதல் இவற்றினை அவசியம் கொண்டுள்ளது. மென்மையான வழிகாட்டுதல் மூலம் குழந்தையின் தேவைகள் மற்றும் அதன் மனோபாவத்தினை அறிந்து கொள்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |