இளம்பெண்ணிடம் குழந்தையாக மாறிய யானை! கியூட்டான ஆட்டத்தை பாருங்க
யானை ஒன்று இளம்பெண் ஆடும் நடனத்திற்கு ஏற்ப நடமாடியுள்ள காட்சி இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றது.
காட்டு விலங்குகளில் அனைத்து விலங்குகளையும் கதிகலங்க வைப்பதில் யானையும் ஒன்று. ஆம் தனது பாரிய உருவத்தினால் அனைத்து மிருகங்களையும் ஓட வைத்துவிடும்.
ஆனால் அப்படிப்பட்ட விலங்கு இங்கு குழந்தையாக மாறி இளம்பெண் ஆடும் நடனத்திற்கு ஏற்ப ஆடவும் செய்துள்ளது.
குறித்த காட்சி உத்தரகாண்டில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் எடுக்கப்பட்டிருக்கிறது. அம்மாநிலத்தின் இருக்கும் பிரபலமான தேசிய பூங்காவான அங்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.
குறித்த யானையை பார்க்கும்போது பாடல் ஒன்றுக்கு அதன் முன்பு நடனமாடிய நிலையில், யானையும் பெண்ணுடன் சேர்ந்து நடனமாடியுள்ளது.
யானையின் நடனத்தினை பார்த்து பலரும் அழகாக இருப்பதாக கருத்து தெரிவித்தாலும, சிலர் யானை நடனமாடுவது அழகாக இருந்தாலும் அது கட்டப்பட்டு இருப்பதை பார்க்கும்போது மனது வலிப்பதாக தெரிவித்துள்ளனர்.
அந்த யானையை கட்டி வைக்காமல் வனப்பகுதியில் சுதந்திரமாக செல்ல அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.