சுற்றுலாப்பயணியை விரட்டி விரட்டி தாக்கிய யானை... புகைப்படத்தால் நேர்ந்த விபரீதம்
சுற்றுலாப் பயணி ஒருவரை யானை ஒன்று விரட்டி விரட்டி தாக்கியுள்ள காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யானையின் உச்சக்கட்ட கோபம்
கர்நாடகாவில் பந்திப்பூர் வன உயிரின சரணாலயம் அருகே சுற்றுலா பயணியை காட்டு யானை ஒன்று துரத்திச் சென்று தாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த சுற்றுலாப்பயணி என்பது தகவல் வெளியாகியுள்ளது. இவர் புகைப்படம் எடுப்பதற்கு அருகே சென்ற போது கோபத்தில் காட்டு யானை பயங்கரமாக விரட்டியுள்ளது.
யானையிடமிருந்து தப்பிப்பதற்கு தலைதெறிக்க ஓடிய குறித்த நபர், ஒரு கட்டத்தில் கால் இடறி கீழே விழுகின்றார். உடனே யானை அவரைத் தாக்கி மிதித்துவிட்டு சென்றுள்ளது.
குறித்த நபரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |