வேகமாக செல்லும் மடிக்க கூடிய இ-சைக்கிள் அறிமுகம் - சிறப்பு அம்சங்கள் என்னென்ன தெரியுமா?
வேகமாக செல்லக்கூடிய இ- சைக்கிளை மின் வாகன உற்பத்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் சைக்கிள் பற்றிய சுவாரசியமான தகவல்களை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.
இந்த சைக்கிள் பெயர் மாடல் எஃப் (Model F) என வைத்துள்ளனர். இதை க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள்களின் தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் இந்த எலெக்ட்ரிக் பைக் கம்பெனி இந்த சூப்பரான ஸ்டைலிலான எலெக்ட்ரிக் சைக்கிளை தயாரித்திருக்கும் நிறுவனம் ஆகும். இந்த சைக்கிளில் எலெக்ட்ரிக் பைக் கம்பெனி ஹைட்ரோஃபார்ம் அலுமினியத்தால் தயாரிக்கப்பட்ட சேஸிஸை பயன்படுத்தியிருக்கின்றது.

ஸ்டைலிஷ் சைக்கிள்
மேலும், 24 அங்குல வீல்கள் இ-சைக்கிளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த வீல்களில் சற்றே குண் டான தோற்றம் கொண்ட டயர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மூன்று அங்குல அகல டயரே மாடல் எஃப் இ-சைக்கிளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
இந்த இ சைக்கிளில் மிக முக்கியமான வசதியாக மடித்துக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டிருக்கின்றது. ஆகையால் பயன்படுத்தாத நேரம் தவிர்த்து, எளிமையாக மடித்து எடுத்து செல்லலாம்.
இதுமட்டுமின்றி, இ-சைக்கிளின் பயன்பாட்டை சுவாரஷ்யமானதாக மாற்றும் பொருட்டு சஸ்பென்ஷன் ஃபோர்க்குகள் மற்றும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. சிறப்பான ரைடிங் அனுபவத்தைப் பெற உதவியாக இருக்கின்றன.

80 கிமீ பயணம்
இத்தோடு, பேட்டரி தீர்ந்து விட்டாலும் பயமின்றி பயணிப்பதற்கு ஏதுவாக பெடலிங் வசதி வழங்கப்பட்டிருக்கின்றது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 80 கிமீ ரேஞ்ஜ் தரக் கூடிய பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பேட்டரி சைக்கிளின் ஃப்ரேமுக்குள் பொருத்தப்பட்டிருக்கும். இதனை தேவை எனில் வெளியில் கழட்டி எடுத்துக் கொள்ளவும் முடியுமாம்.
இதற்காகவே லாக்கிங் வசதி பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், முழு அளவில் எலெக்ட்ரிக் பவர் மோடில் பயணிக்கும்போது பெடல் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது.
இவை அதிக வேகத்தில் செல்லக் கூடியது. அதாவது மணிக்கு 40 கிமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இந்தியாவில் இந்த சைக்கிளை ஓட்ட வேண்டும் என்றால் கட்டாயம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
வாகன பதிவு மற்றும் காப்பீடு போன்றவை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
சிறுவர்களுக்கு இந்த சைக்கிள் பயன்படுத்த தடை விதிக்கப்படும். இதனால் அமெரிக்க மின் வாகன உற்பத்தி நிறுவனத்தின் மாடல் எஃப் எலெக்ட்ரிக் சைக்கிள் இந்தியா வருவது சாத்தியமற்றதாக மாறியுள்ளது.