இந்தியாவில் களமிறங்கும் ஓலா எலெக்ட்ரிக் கார்! சிறப்பு அம்சங்கள் என்ன?
பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பால், அதிகம் எலெக்ட்ரிக் வாகனத்திற்கு மக்கள் மாற தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் இந்தியாவில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கும் நிலையில், விரைவில் எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வர உள்ளது.
இதனிடையில் ஓலா நிறுவனம் இந்தியாவில் 2024ஆம் ஆண்டில் ஓலாவின் முதல் எலக்ட்ரிக் கார் மாடல் வெளியாகும் என அறிவித்துள்ளது.
ஏற்கனவே ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் உள்ள நிலையில் தற்போது மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது என்பது தெரிந்ததே.
மேலும் எலக்ட்ரிக் கார்களின் விலை 1 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய எலக்ட்ரிக் கார்களை 18 முதல் 24 மாதங்களில் வெளியிடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, ஓலா தயாரிக்கும் எலெக்ட்ரிக் கார்கள் 4 வினாடிகளில் 0-100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கும் என்றும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிமீ வரை செல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.
Picture abhi baaki hai mere dost😎
— Bhavish Aggarwal (@bhash) August 12, 2022
See you on 15th August 2pm! pic.twitter.com/fZ66CC46mf