கணவர் இறந்த துக்கத்தில் மயங்கி விழுந்த மனைவி! நொடியில் உயிரிழந்த சோகம்
கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி உயிரிழந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டத்தின் பெரியநாயக்கன் பாளையத்தில் வசித்து வந்த 92 வயதான ராதாகிருஷ்ணன், வயது முதிர்வால் உயிரிழந்தார்.
அவரின் மனைவி சரோஜா (82), கணவரின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் வேதனையுடன் அழுதபடியே மயங்கி விழுந்துள்ளார்.
இந்நிலையில் அவரை உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவ பரிசோதனையில்,சரோஜா ஏற்கனவே உயிரிழந்துவிட்ட சோக செய்தியை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து நேற்று மாலை, 3:00 மணிக்கு ராதாகிருஷ்ணன் - சரோஜா ஆகியோரது உடல்கள் பெரியநாயக்கன்பாளையம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டன.
திருமணவாழ்க்கை முழுவதும் இணைபிரியாமல் வாழ்ந்த இந்த தம்பதியினர் ஒரே நாளில் உயிரிழந்தது அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |