பரட்டை தலை மாதிரி உங்க முடி அசிங்கமா இருக்கா? அப்ப இந்த ஒரே ஒரு பொருள தலையில தடவுங்க!
நாம் அனைவரும் பெரும்பாலான நாட்களில் தலை முடியை பராமரிக்க அதிக நேரம் ஒதுக்குவது இல்லை.
சில மூலப் பொருட்களை உங்கள் முடியில் பயன்படுத்தினால் செலவு இல்லாமல் முடியை பாதுகாக்கலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் முட்டை பிடிக்கும்.
இது உங்கள் உடலுக்கு மட்டுமல்ல, உங்கள் தலைமுடிக்கும் பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.

முட்டையின் வெள்ளைக்கரு
முட்டையின் வெள்ளைக்கரு முடி உதிர்வை தடுக்கவும், சேதத்தை சரிசெய்யவும் ஹேர் மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம்.
கூடுதலாக, முட்டையின் வெள்ளை நிற ஹேர் மாஸ்க்குகள் உங்கள் உச்சந்தலையை சுத்தம் செய்யவும், உங்கள் முடியை வலுப்படுத்தவும், வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பொடுகு தொல்லையை போக்கவும் உதவுகிறது.

முட்டையின் வெள்ளைக்கருவை எவ்வாறு பயன்படுத்துவது?
இரண்டு முட்டையை உடைத்து வெள்ளைக்கருவை தனியாக பிரித்து எடுக்கவும்.
வெள்ளைக்கருவில் இருந்து நுரை கலந்த கலவையை செய்து, தேவைக்கேற்ப முடி மற்றும் உச்சந்தலையில் தடவவும்.
அதை 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும். பின்னர், முடியை நன்கு அலச வேண்டும்.

முக்கிய குறிப்பு
அலர்ஜி இருப்பவர்கள் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இதனை செய்ய வேண்டாம்.