வித்தியாசமான முட்டைக் கீமா செய்து சாப்பிடுங்க: அடடா என்ன சுவை
முட்டையைக் கொண்டு பலவிதமான ரெசிபிக்கள் செய்யலாம்.
உடலுக்கு தேவையான சத்துக்கள் முட்டையில் அடங்கியுள்ளன, சரி இனி முட்டைக் கீமா எவ்வாறு செய்வதென பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வேகவைத்த முட்டை - 3
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காயம் - 2
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி, வெள்ளைப் பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி என்பவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்னர் கடாயை அடுப்பில் வைத்து அதில் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் என்பவற்றை போட்டு பொன்னிறமாகும்வரை வதக்க வேண்டும்.
பின்னர் அதில் இஞ்சி, வெள்ளைப் பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதன் பின்னர் தக்காளி சேர்த்து அது பாதி வதங்கியதன் பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மசாலாத் தூள், உப்பு என்பவற்றைப் போட்டு கிளறவும்.
அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கடாயை மூடி 10 நிமிடம் கொதிக்கவிட வேண்டும். 10 நிமிடங்களின் பின்னர் இதில் வேகவைத்த முட்டையை துருவி சேர்க்க வேண்டும்.
பின்னர் அதில் நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி, குறைந்த தீயில் 3 நிமிடம் வேகவிடவும். அருமையான சுவையான முட்டை கீமா ரெடி.