கருமுட்டையை உறைய வைக்கும் முறையை யாரெல்லாம் பயன்படுத்திக்கொள்ளலாம்? எச்சரிக்கை
மருத்துவம் வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில், கருத்தரிக்கும் முறையில் பல்வேறு விதமான தொழில்நுட்பங்களுடன் கூடிய சிகிச்சை புகுத்தப்பட்டுள்ளன.
கருமுட்டைகளை வெளியே எடுத்து, உறைய வைத்து சேகரித்து பின்பு விரும்பும் நேரத்தில் கருத்தரிக்க உதவும் எக் ஃபிரீசிங் என்னும் கருத்தரிக்கும் முறை பற்றி தான் இன்று பார்க்க போகின்றோம்.
எக் ஃபிரீசிங் முறை என்றால் என்ன?
சமீப காலங்களில் கருமுட்டையை உறைய வைத்து சேகரிக்கும் எக்ஃப்ரீசிங் என்னும் முறை வழக்கத்திற்கு வந்துள்ளது.
20- 30 வயதிற்குட்பட்ட ஒரு பெண் பல்வேறு காரணங்களுக்காகவும், தங்களது வாழ்க்கை மற்றும் குழந்தை பேறு கருதியும் தன்னுடைய கருமுட்டையை வெளியே எடுத்து, உறைய வைத்து நீண்ட காலத்திற்கு பாதுகாக்கும் இந்த முறையை கருமுட்டை உறைய வைத்தல் என அழைக்கப்படுகிறது.
கருமுட்டைகளை நீண்ட நாட்களுக்கு உறைய வைத்து பாதுகாக்கும் இந்த முறை அறிவியலில் ஊசைட் ஃபிரீசிங் என அழைக்கப்படுகிறது.
இந்த முறையில் பெண்ணின் கருப்பையில் இருந்து கருமுட்டைகள் சேகரிக்கப்பட்டு பின்பு உறைநிலையில் வைக்கப்படுகின்றன.
இதன் மூலம் எதிர்காலத்தில் கருத்தரிக்க முடியாத நிலை ஏற்பட்டாலோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களினாலும் கூட ஏற்கனவே சேகரித்து வைத்து தன்னுடைய கருமுட்டையை நவீன மருத்துவ அறிவியல் முறையில் கருத்தரிக்க வைத்து குழந்தை பெற்று கொள்ள முடியும்.
வியக்க வைத்த ஆராய்ச்சி
இந்த முறையை சாத்தியமாக்க ஆராச்சியாளர்கள் பல ஆண்டுகள் கடினமாக முயற்சிசெய்துள்ளனர்.
பல ஆராய்சிகளை மேற்கொண்டு அதன் பின்பே நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், மிக நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இந்த கருமுட்டை உறைய வைத்தல் செய்யப்படுவதாகவும் பிர்லா பெர்டிலிட்டி மற்றும் ஐவிஎஃப் இன் கன்சல்டன்ட் டாக்டர் சவுரன் பட்டாச்சார்ஜி என்பவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் பல்வேறு காரணங்களுக்காக “எக் ஃப்ரீசிங்” எனப்படும் கருமுட்டை உறையவைத்தல் முறையை விரும்புகின்றனர்.
உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு மருத்துவ சிகிச்சை எடுத்து வரும் பெண்களுக்கும், உடல் நலத்தில் ஏதேனும் குறைபாடோ அல்லது இளவயது வாழ்க்கையை நன்றாக அனுபவித்துவிட்டு நடுத்தர வயதில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் மக்களுக்கு இந்த கருமுட்டை சேகரிப்பு முறை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
சேமித்து வைக்கப்படும் இந்த கருமுட்டை இயற்கையாக உருவாகும் கருமுட்டையை போலவே அதே தரத்துடன் இருக்கும் எனவும், 10 வருடங்கள் வரை இதனை சேமித்து வைக்க முடியும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எப்படியான சந்தரப்பத்தில் இந்த சிகிச்சையை செய்யலாம்?
பெண்ணிற்கு புற்றுநோயோ அல்லது புற்று நோய்க்கான சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த கருமுட்டை உறைய வைக்கும் முறையில் முறையில் தன்னுடைய கருமுட்டையை சேமித்து வைக்கலாம்.
ஏனெனில் புற்று நோய்க்காக அளிக்கப்படும் சிகிச்சை முறைகளில் கீமோதெரபி மற்றும் ரேடியோ தெரபி ஆகிய சிகிச்சை முறைகள் பெண்ணின் கருப்பையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் அல்லது அவர்கள் கருத்தரிப்பதில் ஏதேனும் பிரச்சினையை உண்டாக்கலாம்.
எனவே புற்று நோய்க்கான சிகிச்சை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அந்த பெண்ணினுடைய கருப்பையில் இருந்து கருமுட்டையை எடுத்து, ஆய்வகத்தில் சேமித்து வைத்து விட வேண்டும்.
எதிர்காலத்தில் புற்று நோய்க்கான சிகிச்சை முடிந்த பின்பு அல்லது தாம் விரும்பும் நேரத்திலும் கருமுட்டையை கருத்தரிக்க வைத்து குழந்தை பெற்று கொள்ள முடியும்.
கருத்தரிக்க விரும்பும் பெண் ஐவிஎஃப் எனப்படும் முறையில் குழந்தை பெற விரும்பினால், இந்த கருமுட்டை உறைய வைத்து சேமிக்கும் முறையைபயன்படுத்தி கொள்ளலாம்.
தன்னுடைய ஆண் துணையிடம் சரியான அளவிலோ அல்லது தரமான உயிரணுக்கள் இல்லையென்றாலோ பெண்ணின் கருப்பையில் இருந்து கருமுட்டையை சேமித்து வைத்துக்கொண்டு பிறகு ஆய்வகத்தில் பரிசோதனை செய்து தரமுள்ள உயிரணுக்களை கருமுட்டையில் செலுத்தி குழந்தை பெற்று கொள்ள முடியும்.
கருத்தரிக்க வைக்கப்பட்ட முட்டையை மீண்டும் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி இயற்கையான முறையில் குழந்தை பெற வைக்க முடியும்.
சமூக காரணங்களுக்காக கருமுட்டை உறைய வைக்கும் முறை
மருத்துவ காரணங்கள் மட்டுமின்றி வாழ்வியல் ரீதியாகவும் பிற சமூக காரணங்களுக்காகவும் சிலர் கருமுட்டையை சேமித்து வைத்து விரும்புவர்.
உதாரணத்திற்கு தன்னுடைய தொழிலில் நன்றாக முன்னேற்றம் அடைந்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என நினைப்பவர்களும், இளம் வயது வாழ்க்கை நன்றாக அனுபவித்து பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என நினைப்பவர்களும் அல்லது வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்த பிறகு நிதி ரீதியாக வலிமையான நிலையை அடைந்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என நினைப்பவர்களுக்கும் இந்த கருமுட்டையை சேமித்து வைக்கும் முறையை பின்பற்றலாம்.
அவர்களின் கருப்பையில் இருந்து சேமித்து வைக்கப்படும் கருமுட்டை பின்வரும் காலங்களில் அவர்கள் விரும்பும் நேரத்தில் கருவூட்டல் செய்யப்பட்டு, அந்தப் பெண் விரும்பினால் மீண்டும் அவர்களுடைய கருப்பைக்குள்ளேயே செலுத்தி குழந்தை பெற்று கொள்ள முடியும்.
இந்த கருமுட்டையை உறைய வைத்து, விரும்பும் நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதிகள் முதலில் உடல் தகுதிகள் தங்களுக்கு உள்ளனவா என்பதை பரிசோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த எக் ஃப்ரீசிங் முறையை செய்வதற்கு வயது ஒரு முக்கிய காரணியாக அமைகிறது.
ஏனெனில் இளம் வயதில் தரமான கரு முட்டைகள் உருவாக்கம் செய்யப்படுகின்றன.
எனவே இந்த முறையில் குழந்தை பெற விரும்பும் தம்பதிகள் ஏதேனும் ஐவிஎஃப் கிளினிக்கை அணுகி அவர்கள் சொல்லும்படி அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி எக்ஃப்ரீசிங் செய்வதற்கு தங்களுக்கு தகுதி உள்ளதா அதற்கான வயது உள்ளதா மேலும் கருமுட்டை வெளியே எடுத்து சேமிக்கும் அளவிற்கு உடல்நிலை ஒத்துழைக்குமா போன்றவற்றை பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
அப்பொழுதுதான் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமானதாக இருக்கும். எதற்காக தம்பதிகளிடம் இந்த முறையை பின்பற்ற விரும்புகிறார்கள் என்ற விசாரணை, ரத்த பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் கவுன்சிலிங் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன.
முக்கிய குறிப்பு
இந்த கருமுட்டையை உறைய வைத்து குழந்தை பெற்றுக் கொள்ளும் முறை பற்றி பல்வேறு தவறான கருத்துக்கள் மக்களிடம் பரவியுள்ளது.
இப்படி கருமுட்டை வெளியே எடுத்து அதன் பிறகு கருவூட்டப்பட்டு பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்காது என்பது போன்ற கருத்துக்கள் மக்களிடையே நிலவி வருகின்றன.
இவை மிகவும் தவறானதும் உண்மைக்கு புறம்பானதும் ஆகும்.
நீங்கள் எப்போது விரும்பினாலும் உங்களது கருமுட்டையை உறைய வைத்து சேமித்து வைத்துக் கொள்ள முடியும் என டாக்டர் பட்டார்ஜி தெரிவித்துள்ளார்.
மேலும் சமூக காரணங்களுக்காக எக் ஃப்ரீசிங் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்கள் எந்த வயதிலும் இதனை செய்யலாம் அல்லது எந்த உடல் ரீதியான காரணங்களும் இதனை பாதிக்காது என்ற நம்பிக்கையை கொண்டுள்ளனர்.
உண்மையில் இது தவறான ஒன்று. பெண்களில் இருந்து பெறப்படும் கருமுட்டையானது அவர்களின் வயது மற்றும் உடல் நிலையை பொறுத்து கருமுட்டையின் தரமும் மாறுபடும்.
எனவே இப்படி கருமுட்டை சேகரிக்க விரும்பும் பெண்கள் இளம் வயதிலேயே கருமுட்டையை உறைய வைத்து சேமித்து வைக்க வேண்டும்.