அடிக்கடி ட்ரை ஷாம்பு யூஸ் பண்றீங்களா...? புற்றுநோய் எச்சரிக்கை
பொதுவாக தற்போது இருப்பவர்கள் தலையை நன்றாக கழுவ சிரமப்பட்டு கொண்டு ட்ரை ஷாம்பு பயன்படுத்துவார்கள்.
ஆனால் ட்ரை ஷாம்பு தினமும் தலைக்கு பயன்படுத்துவதால் நோய்கள் வர வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
கோடைக்காலங்களில் ஏற்படும் வியர்வை, பிசுபிசுப்பு இவைகளை சுத்தம் செய்வதற்காக தான் ஆரம்பகாலங்களில் டிரை ஷாம்பூ பயன்படுத்தினார்கள்.
எந்த ஒரு பொருளையும் அதிகப்படியாக பயன்படுத்துவது நல்லதல்ல என்பதற்கு ஷாம்பூ தான் சரியான உதாரணம்.
அந்த வகையில் ட்ரை ஷாம்பு என்றால் என்ன? அதனால் வரவிருக்கும் ஆபத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
ட்ரை ஷாம்பு என்றால் என்ன?
Image - allure
பெண்கள் அல்லது ஆண்களுக்கு வழக்கமாக இருக்கும் தலைமுடி அல்லாமல் அந்த முடியை ரெஃப்ரெஷ் செய்து, சுத்தப்படுத்துவதற்காக ஒரு பிரபல நிறுவனத்தின் கேர் ப்ராடக்ட்டில் ஒன்று தான் ட்ரை ஷாம்பு.
இது பயன்படுத்துவதால் தலையில் இயல்பாக இருக்கும் வாசணை சென்று செயற்கை வாசணை தரும். தலைமுடியை வெளியிலிருந்து பார்க்கும் பொழுது பரவலடைந்து காணப்படும்.
ட்ரை ஷாம்புவின் பலன்கள்
1. தலைமுடியை குறைந்த நேரத்தில் பராமரிக்கலாம்.
2. வேலையில் ஓடிக் கொண்டிருப்பவர்களின் வேலையை இலகுப்படுத்தும்.
3. அடிக்கடி பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு இந்த பொருள் பயனுள்ளதாக இருக்கும்.
4. தலைமுடியை அலசாமல் விரைவில் துர்நாற்றம், வியர்வையை அகற்றலாம்.
5. தலைமுடியை அடர்த்தியாக காட்டும்.
பாதிப்புக்கள்
1.ஒவ்வாமை காரணமாக மயிர்க்கால்களில் எரிச்சல் ஏற்படும். இதனால் தலையில் சிவத்தல், அரிப்பு,ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.
2. மயிர்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு வியர்வை மற்றும் அழுக்குகள் சரியாக வெளியேற முடியாமல் வீக்கம் ஏற்படும்.
3. இயற்கையாக தலையில் இருக்கும் வாசணை, எண்ணெய் தன்மை இல்லாமல் போய்விடும். இதன் காரணமாக காலப்போக்கில் தலைமுடி வெடிக்க ஆரம்பித்து விடும்.
4. முறையாக சுத்தம் செய்யாவிட்டால் தலைமுடியில் துர்நாற்றம், பாக்டீரியா வளர்ச்சி மற்றும் ஆரோக்கியமற்ற மயிர் கால்கள் போன்ற விளைவுகள் உண்டாகும்.
5. தலைமுடியின் நிறம் மாற ஆரம்பிக்கும். அதாவது வெள்ளை நிறமாக மாற ஆரம்பிக்கும்.
6. ட்ரை ஷாம்பூவினால் ஆஸ்பெஸ்டாஸ் ஃபைபர்கள் மற்றும் மெக்னீசியம் சிலிகேட் தூள் போன்று காணப்படும். இது சுவாசக் கோளாறுகள் மற்றும் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |