கொத்துகொத்தாக கொட்டும் முடியை தடுத்து நிறுத்த வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க போதும்!
இன்றைய நவீன காலக்கட்டத்தில் உடலளவில் அனைவருக்கும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை என்றால், அது முடி கொட்டும் பிரச்சினை தான். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், உண்மையாகவே செயற்கையான பொருட்களை வாங்கி உபயோகிப்பதை நிறுத்தினாலே முடியின் தரம் நிலைத்து நிற்கு என்பதே உண்மை..
இயற்கை முறையில் தடுக்க சில வழிமுறைகளை பற்றி இங்கே பார்ப்போம்... வெந்தயம் வெந்தய விதைகளை தலைமுடிக்கு வலிமையாக்குவதோடு மட்டுமின்றி, மென்மையாகவும், பட்டுப்போன்றும் மாற்றும். அதற்கு சிறிது வெந்தயத்தை நுரில் ஊற வைத்து அரைத்து, அதில் சிறிது கடுகு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, தலைமுடியின் தடலி ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
கற்றாழை கற்றாழை இலையில் உள்ள ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, அதை தலைமுடியின் வேர்ப்பகுதியில் படுமாறு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
இதனால் முடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்து, முடி மென்மையாகவும், பட்டுப்போன்றும் இருக்கும். முட்டை முட்டை தலைமுடிக்கு ஊட்டத்தை அளித்து, மயிர்கால்களை வலுவாக்கும். அதற்கு முட்டையின் வெள்ளைக்கருவை பிரித்தெடுத்து, அதில் சிறிது தயிர் சேர்த்து நன்கு கலந்து, பின் அதை தலைமுடியில் தடவ வேண்டும்.
பின் ஒரு மணிநேரம் ஊற வைத்து, மைல்டு ஷாம்புவால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், தலைமுடி உதிர்வது நின்று, நன்கு வலுவாகும். வெங்காயம் குளிர்காலத்தில் தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் ஒரு அற்புதமான பொருள் தான் வெங்காயம்.
அதற்கு வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை முடியின் வேர்ப்பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும்.
இப்படி வாரத்திற்கு குறைந்தது 3 முறை செய்தால், முடி உதிர்வது குறைந்து, அதன் வளர்ச்சி தூண்டப்படும்.