அடிக்கடி லெமன் வாட்டர் குடிக்கும் பழக்கம் உள்ளதா? பற்கள் ஜாக்கிரதை
பொதுவாக இளம் சூடான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என பலரும் நம்புகிறார்கள்.
இந்த நீரை காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும். அத்துடன் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவியாக இருக்கிறது, இதனால் வயிறு தொடர்பான பல பிரச்சினைகள் வருவது குறைக்கின்றது.
மேலும் எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி மற்றும் வளர்சிதை மாற்றமும் அதிகரிக்கின்றது. மற்ற வேளைகளை விட காலை வேளையில் இந்த எலுமிச்சை தண்ணீரை குடிப்பதால் உடலில் தேங்கி இருக்கும் தேவையற்ற நச்சுக்கள் வெளியேறுகின்றது மற்றும் கொழுப்புக்களும் குறைக்கின்றது.
இவ்வளவு நன்மைகளை கொடுத்தாலும் இந்த பழக்கத்தால் உடலுக்கு சில தீமைகளும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அப்படி என்னென்ன தீமைகள் எலுமிச்சை தண்ணீரை குடிப்பதால் ஏற்படுகின்றன என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
லெமன் வாட்டரால் ஏற்படும் பிரச்சினைகள்
1. எலுமிச்சையில் பொதுவாகவே வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இது உடலில் அதிகமாகும் பொழுது முக்கிய உறுப்புகளை பாதிக்கலாம். எனவே வைட்டமின் சி நுகர்வு மிதமானதாக இருப்பது அவசியம்.
2. வைட்டமின் சி-யை அதிகமாக எடுத்து கொண்டால் வயிற்றில் அமில சுரப்பு அதிகமாகும். இதே வேளை அசிடிட்டியின் ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது. இதனால் சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, குமட்டல் உள்ளிட்ட பிரச்சினைகள் வரக்கூடும். அதிலும் குறிப்பாக “gastroesophageal reflux” பிரச்சனை கொண்டவர்கள் லெமன் வாட்டரை அளவாக எடுத்து கொள்வது சிறந்தது.
3. சிலர் வாய் துர்நாற்றத்தை நீக்க மற்றும் பற்களை சுத்தமாக வைத்து கொள்ள எலுமிச்சை பயன்படுவார்கள். ஆனால் இதன் அளவு அதிகரிக்கும் பட்சத்தில் சிட்ரிக் ஆசிட் வாய் திசுக்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக வாய் வலி, கொப்பளங்கள், புண்கள் மற்றும் எரிச்சல் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.
4. அடிக்கடி எலுமிச்சை ஜூஸ் பற்களில் நேரடியாக படுவதால் பற்கள் வலு இழக்கவும் வாய்ப்பு இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |