புற்றுநோயை எதிர்த்து போராடும் தக்காளி சட்னி... இனி இப்படி செய்து சாப்பிடுங்க
பொதுவாகவே இந்திய உணவுகளில் சட்னி வகைகளுக்கு என்று தனித்துவமான இடம் கொடுக்கப்படுகின்றது. சில வகை சட்னிகளின் சுவைக்காகவே சாப்பாட்டை சாப்பிடுபவர்களும் இருக்கின்றார்கள்.
தேங்காய் சட்னி, வெங்காய சட்னி, புதினா சட்னி, காரசடனி, இஞ்சி சட்னி என பல வகைகள் இருந்தாலும் பெரும்பாலானவர்களின் விருப்பப்பட்டியலில் முதலிடம் வகிப்பது தக்காளி சட்னி தான்.

இது சுவைக்காக மட்டுமன்றி அதன் ஆரோக்கிய நன்மைகளுக்கும், மருத்துவ குணங்களுக்கும் பிரபலமானது.
தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி காணப்படுவதால், அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாப்பதிலும் ஆற்றல் காட்டுகின்றது.
மேலும் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கின்றது. தற்போது தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் ஒரே அளவில் பராமரிக்க முடியும் என்று பிரிட்டன் ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிவு நோய், நுரையீரல், மார்பகம் மற்றும் ப்ரோஸ்டேட் (Prostate) புற்றுநோய் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதில் தக்காளியின் பங்கு அளப்பரியது.
இவ்வளவு ஆரோக்கிய பயன்களையும், மருத்துவ குணங்களையும் கொண்ட தக்காளியில் ரோட்டு கடை பாணியில் அசத்தல் சட்னி செய்யும் எளிய முறை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தக்காளி -2
சிவப்பு மிளகாய் - 10
பூண்டு பல் - 4
புளி - 1 சிறிய நெல்லிக்காய் அளவு
கொத்தமல்லி விதை -½ ஸ்பூன்
சீரகம் - - ½ ஸ்பூன்
சோம்பு - 1/4 ஸ்பூன்
வெந்தயம் - ½ ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
கடுகு -1 ஸ்பூன்
எண்ணெய் -1 ஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில், முழு தக்காளியை போட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து, அதனுடன் பூண்டு புளி, சிவப்பு மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தக்காளியின் தோல் உரியத் தொடங்கும் வரையில் நன்றாக வேகவிட வேண்டும்.
பின்னர் அடுப்பை அணைத்து தக்காளியை தனியாக எடுத்து ஆற விட வேண்டும். இதற்கிடையில், கொத்தமல்லி விதை, வெந்தயம், சீரகம், சோம்பு மற்றும் கடுகு ஆகியவற்றை ஒரு கடாயில் போட்டு எண்ணெய் சேர்க்காமல் நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதனுடன் தக்காளி கலவையை மென்மையான பேஸ்டாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும்,எஅதில் கடுகு போட்டு பொரிய விடவும். கடுகு பொரிந்ததும் அதில் கறிவேப்பிலையை போட்டு தாளிக்கவும்.
பின்னர் இதில் அரைத்த தக்காளி சட்னியை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு 2 நிமிடங்களுக்கு கொதிக்கவிட்டு இறக்கினால் அவ்வளவுதான் அசத்தல் சுவையில், ரோட்டுக்கடை பாணியில் ஆரோக்கியம் நிறைந்த தக்காளி சட்னி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |