நீதிமன்ற உத்தரவை மீறி நடக்கும் சதி திருமணம்! பார்த்திபனின் முடிவு என்ன?
ஈரமான ரோஜாவே 2 சீரியலில் பார்த்திபனின் அம்மா பாரத்திபனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்து வருகிறார்.
ஈரமான ரோஜாவே 2 சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று ஈரமான ரோஜாவே 2. இந்த சீரியல் மற்றைய சீரியல்கள் போல் இல்லாமல் சற்று வித்தியாசமான கதையம்சமாக இருக்கிறது.
இரண்டு கதாநாயகிகளையும், இரண்டு கதாநாயகர்களையும் கொண்டு அவர்களின் ஜோடிகளை மாற்றி திருமணம் செய்து வைத்து அவர்கள் வாழ்கிறார்களா இல்லையா என்பதனை கருவாக வைத்து கதைக்களம் நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் ஜிவா- பிரியா மற்றும் காவியா- பார்த்திபன் என்ற இரு ஜோடிகளும் திருமணம் செய்து கொண்டு தங்களின் திருமண வாழ்க்கையை ஆரம்பித்து தற்போது வரை இரண்டு ஜோடிகளும் நிம்மதியாக இருக்க வில்லை.
பார்த்திபனின் அம்மாவிற்கு காவியா திருமணத்திற்கு முன்னர் ஒருவரை காதலித்த விடயம் தெரிந்த பின்னர் காவியா விவாகரத்து செய்து விட்டு செல்லுமாறு வற்புறுத்தி வருகிறார்.
இதனால் காவியாவும் பார்த்திபனிடம் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கி விட்டு சென்று விட்டார்.
நீதிமன்ற உத்தரவை மீறி நடக்கும் சதி திருமணம்
ஆனால் இதனை நீதிமன்றம் தடுத்து, இன்னும் ஆறு மாதக்காலம் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என கூறியிருக்கிறார்கள்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பார்த்திபனின் அம்மா, ரம்யாவை திருமணம் செய்து விட வேண்டும் எண்ணத்தில் இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பார்த்திபனுக்கு ஒப்புதல் கேட்காமல் ரம்யாவிற்கு பூ வைத்து நிச்சயம் செய்துள்ளார். இந்த விடயத்தை தடுக்க முடியாத ஒரு நிலையில் காவியா இருப்பதால் வழமைப்போல் அழுக ஆரம்பித்து விட்டார்.
ஆனால் இதனை பார்த்த ரசிகர்கள் காவியாவின் அக்காவாகிய பிரியா இந்த காரியங்களை தடுப்பதற்கான வாயப்புகள் அதிகம் இருப்பதாக கமண்ட் செய்து வருகிறார்கள்.
இந்த பூ வைக்கும் நிகழ்வு ஜிவாவிற்கு கூறாமல் நடந்ததால் ஜிவா கோபமடைந்து அவருடைய அம்மாவிடம் கேக்கலாம் என சென்றுள்ளார். இதனை தொடர்ந்து இந்த சீரியல் பார்த்திபனின் மனைவி காவியா அல்லது ரம்யாவா என ரசிகர்கள் மத்தியில் ஒரு டுவிஸ்ட்டை இயக்கநர் ஏற்படுத்தியுள்ளார்.