முகத்திற்கும், முடிக்கும் இயற்கை அழகு தான் எப்பவுமே நல்லது: அழகின் இரகசியத்தை உடைத்த சீரியல் நடிகை!
பொதுவாகவே பெண்களுக்கு முக அழகு மற்றும் முடி வளர்ச்சி என்பது மிக மிக முக்கியமானது. அதேபோல சீரியல் நடிகைகளும் அப்படித்தான் தங்களின் அழகைப் பாதுகாப்பதில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். அப்படித்தான் பிரபலமான சீரியல் நடிகை பவித்ரா ஜனனி தனது அழகின் இரகசியத்தை கூறியிருக்கிறார்.
சீரியல் நடிகை பவித்ரா ஜனனி
சினிமாவை விட தற்போது சீரியலுக்கும் மவுசு அதிகரித்துக் கொண்டே போய் கொண்டிருக்கிறது. அந்தவகையில் தற்போது அதிகம் பிரபலமான ஓடிக் கொண்டிருக்கிருக்கும் ஈரமான ரோஜாவே சீரியல் பாகம் ஒன்றில் நடித்து பிரபலமானவர் தான் பவித்ரா ஜனனி.
இவர் சென்னையை சேர்ந்தவர், கல்லூரி படிப்பில் அதிக கவனம் செலுத்தி வந்த இவர் விஜய் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டிருந்தார்.
அதற்குப் பின் தான் ஒரு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு கல்யாணம் முதல் காதல் வரை, பகல்நிலவு, மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு, ஈரமான ரோஜாவே -1 என சில சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.
தற்போது தென்றல் வந்து என்னைத் தொடும் எனும் சீரியலில் தனது வித்தியாசமான நடிப்பைக் காட்டி வருகிறார்.
அந்தவகையில், பவித்ரா ஜனனி தன் முக அழகை பாதுகாப்பதற்கு சில வழிமுறைகளை நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பிலான இன்னும் தெளிவாக தகவல்களை கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.