வேறு வழியில்லாமால் தான் நடிக்க வந்தேன்: ரோஜா சீரியலில் நடித்ததற்கு இதுதான் காரணம்
குடும்ப கஷ்டத்திற்காக படிப்பை நிறுத்தி விட்டு வேலை செய்துக் கொண்டே 10ஆவது வரை படித்ததாக ரோஜா சீரியலில் நடித்து பிரபலமான நடிகை பிரியங்கா தன் சோக கதையைக் கூறியிருக்கிறார்.
பிரியங்கா - ரோஜா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி தற்போது முடிவடைந்த சீரியல் தான் ரோஜா. இந்த சீரியல் ஆரம்பம் முடிவு வரை மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாக ஓடியது.
இந்த சீரியலில் நடித்த கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் புதுமுகங்களாக இருந்தாலும் அவர்களை மக்கள் ஏற்றுக் கொண்டு இந்த சீரியலை வெற்றியடைய வைத்தார். இதில் கதாநாயகியாக நடித்த பிரியங்கா நல்காரி அதாவது ரோஜா என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியும்.
இவர் ஆந்திராவில் பிறந்து தெலுங்கு சினிமாவில் சில சீரியல்களிலும், திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். 16வயதில் இருந்தே இவர் நடித்து வருகிறார்.
ரோஜா சீரியல் வாய்ப்பு
இவர் தமிழில் காஞ்சனா 3, சம்திங் சம்திங் திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருக்கிறார். இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு வி.ஜேவாக மக்களுக்கு அறிமுகமாகினார்.
அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு 10 வரையும் படித்திருக்கிறார். பிறகு நடித்துக் கொண்டே படிக்க ஆரம்பித்து விட்டார். இவர் நடிப்பை விட நடனம் மேல் அதீத ஆர்வமாம். இவர் ஒரு நடனத்தின் மூலம் தான் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா 3 படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததாம்.
அதற்குப்பிறகு தான் ரோஜா சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. இந்த சீரியலில் குடும்ப குத்து விளக்காக அனைவருக்கும் பிடித்தமான பெண்ணாக நடித்திருந்தார்.
ரோஜா சீரியல் 4 வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியாக நடித்து வரும் சிப்பு சூர்யாவுடன் நடித்திருந்தார்.
இவர்கள் இருவரின் ஜோடியும் மக்களிடையே பெரிதும் பேசப்பட்டது. தற்போது சிப்புவும் பாரதியாக வேறு ஒரு சேனலில் நடிக்க பிரியங்காவும் வேறு ஒரு சேனலில் சீதாவாக நடித்து வருகிறார்.