ஃபார்முலா 1 வெற்றி கோப்பையை வாங்கிய ஈழத்தமிழர் அருண் ராஜ்குமார்
ஃபார்முலா 1 Constructors கிண்ணத்தை மெர்சிடிஸ் அணியின் சார்பில் ஈழத்தமிழர் அருண் ராஜ்குமார் பெற்றுள்ளார்.
ஃபார்முலா 1
ஸ்பீல்பெர்க்கின் ரெட் புல் ரிங்கில் நடைபெற்ற ஆஸ்திரிய கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில் மெர்சிடிஸ் அணியின் ஜார்ஜ் ரஸ்ஸல் வெற்றி பெற்ற நிலையில், மெர்சிடிஸ் வீரர் கிமி அன்டோனெல்லி 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.
Constructors பிரிவில் மெர்சிடிஸ் அணி வெற்றி பெற்றதை நிலையில், இதன் பரிசளிப்பு விழாவில், Constructors கிண்ணத்தை மெர்சிடிஸ் அணி சார்பில் ஈழத்தமிழரான அருண் ராஜ்குமார் பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்த Constructors கிண்ணமானது F1 பந்தயத்தில் கார்களை வடிவமைத்து உருவாக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியியலாளர்களின் கூட்டு உழைப்பிற்கு வழங்கப்படுகிறது.

ஈழத்தமிழர் அருண் ராஜ்குமார்
இலங்கை ஈழத்தமிழ் குடும்ப பின்னணியைக் கொண்ட அருண் ராஜ்குமார், பிரித்தானியாவில் வசித்து வருகின்றார். பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்றார்.
இவர், படிப்பின் இறுதி 2 ஆண்டுகளில் மெர்சிடிஸ் ஏஎம்ஜி உயர் செயல்திறன் பவர்டிரெய்ன்ஸில் பயிற்சி மாணவராகச் சேர்ந்துள்ளார்.

தயாரிப்பு பொறியியல், சோதனை பொறியியல், செயலிழப்பு விசாரணை ஆகியவற்றில் அனுபவம் பெற்ற அருண் ராஜ்குமார், தன்னுடைய கடின உழைப்பு மற்றும் திறமையின் மூலமாக நிறுவனத்தின் பந்தயப் பாதையோர ஆற்றல் அலகுப் பொறியாளராக உயர்ந்துள்ளார்.
இவரது முக்கிய பொறுப்பானது பந்தய வார இறுதிகளின் போது மெர்சிடிஸ் பவர் யூனிட்களின் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை கண்காணித்து மேம்படுத்துவது ஆகும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |