தொண்டை வலி பிரச்சனை இருக்கா? அப்போ இந்த மூலிகை இலைகளை சாப்பிடுங்க
உடலின் உஷ்னத்தால் ஏற்படும் சளி, இருமல், தலைபாரம், சைனஸ் போன்ற நோய்களுக்கு சில மருத்துவ குணம் கொண்ட மூலிகைகள் மருந்தாக அமைகின்றது.
மூலிகை இலைகள்
தூதுவளை இலைகளை பலருக்கும் தெரியாமல் இருக்கும். ஆனால் சிலர் இதை தெரிந்து வைத்திருப்பார்கள். இந்த இலைகள் சளி மற்றும் காய்ச்சலுக்கு ஒரு தீர்வாக அமைகிறது.
இதை வெறும் தண்ணீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சுவாச பிரச்சனை இருப்பவர்கள் இந்த மூலிகை இலைகளை தாராளமாக பயன்படுத்தலாம்.
கருந்துளசி இலைகள் இருமலை போக்குவதுடன், தொற்றுகளின் பாதிப்பை துளசி இலைகள் குறைக்கின்றன. இது சுவாச பாதைகளையும் சுத்தமாக்குகிறது.
அறுகம்புல்லை இடித்து வெறும்வயிற்றில் சாறு எடுத்து பிளிந்து குடித்தால் விரைவில் சளி, இருமல் சைனஸ் நீங்கும். இதே போல கற்பூரவள்ளி இலைகளின் சாறு மிகவும் நன்மை தரும்.
இதை தவிர சளி, இருமல், கபம், வறட்டு இருமல், தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு போன்ற அனைத்துவகையான சுவாச கோளாறுகளை இந்த ஓமவல்லி இலைகள் தீர்க்கக்கூடியது.
குழந்தைகளுக்கு சளி பிரச்சனை இருந்தால் இந்த ஓமவல்லி சாற்றை தேன் கலந்து சங்கில் ஊற்றி குடிக்க கொடுத்தால் இந்த பிரச்சனையால் பாதிப்பு இருக்காது.
மார்புச்சளி, நுரையீரல் அடைப்பு, மற்றும் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் வெற்றிலையில் கடுகு எண்ணெயை சிறிது தடவி சூடாக்கி மார்பின்மீது வைத்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து தீர்வு கிடைக்கும்.