நீங்கள் அடிக்கடி மயோனஸ் சாப்பிடுபவரா? அப்போ இந்த பேராபத்து உங்களுக்குத்தான்
இன்றைய காலக்கட்டத்தல் சாட் கடை, சாண்ட்விட்ச் கடை, பர்கர் கடை, சிக்கன் பார்பிக்யூ என பல கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
இதனால், சாண்ட்விட்ச், பர்கர் என மக்கள் அதிகம் வாங்கி சாப்பிடுகிறார்கள். ஆனால், சாண்ட்விட்ச் மற்றும் பர்கரில் சேர்க்கப்படும் மயோனஸின் சுவையே தனிதான். இந்த மயோனஸ் இல்லையென்றால் யாரும் பர்கரை விரும்பி சாப்பிடமாட்டார்கள்.
முழுக்க முழுக்க முட்டை வெள்ளைக்கரு, எண்ணெய் , சர்க்கரை, உப்பு , எலுமிச்சை சாறு கொண்டு தயாரிக்கப்படும் இந்த மயோனஸ் அடிக்கடி சாப்பிட்ட என்னவெல்லாம் ஆபத்து ஏற்படும் என்று பார்ப்போம் -
1. மயோனஸ் அதிக நாட்கள் வைத்து பயன்படுத்தினாலோ, சரியாக ஃபிரிட்ஜில் வைத்து பராமரிக்கப்படவில்லை என்றாலோ, அதில் கெட்ட பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் அதிகமாகி ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
2. மயோனஸில் எண்ணெய் சேர்க்கப்படுவதால், நாம் அடிக்கடி அதை சாப்பிடும்போது, நமக்கே தெரியாமல் உடலில் கலோரி அளவு அதிகரித்து விடும். இதனால் உடல் எடை அதிகரித்துவிடும்.
3. மயோனைஸ் சரியாக சமைக்கப்படாவிட்டால் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.
4. மயோனைஸ் குறைந்தபட்சம் ஒரு சிறிய அளவு வேகவைத்த முட்டைகளுடன் தயாரிக்கப்பட வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |