தினமும் காலையில வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுங்க... ஏகப்பட்ட நன்மையை நிச்சயம் பெறுவீங்க
காலை வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஆன்டி ஆக்ஸிடன்ட், கொழுப்பு அமிலங்கள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நெய் பல உடல்நல பிரச்சினையிலிருந்து பாதுகாக்கின்றது
வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் என்ன பயன்?
நெய் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று நினைத்தால் அது தவறாகும். உடல் கொழுப்பை நெய் குறைப்பதுடன், எடையை குறைக்க முயற்சிக்கும் போது மட்டும் நெய்யை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
நெய்யில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள், சருமத்திற்கு ஆரோக்கியத்தை, சருமம் நீரேற்றமாக இருக்கவும், சுருக்கங்கள் இல்லாமல் தடுக்கின்றது.
வெறும் வயிற்றில் நெய் எடுத்துக்கொண்டால் முடி பளபளப்பாக இருப்பதுடன் முடி உதிர்வும் தடுக்கப்படுகின்றது.
மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு நெய் சிறந்த பொருளாகும். எலும்புகளை வலுப்படுத்தவும், வீக்கத்தை குறைத்து, மூட்டு வலியிலிருந்தும் நிவாரணம் அளிக்கின்றது.
நெய்யில் உள்ள நல்ல கொழுப்புகள் இதயத்தை ஆரோக்கியமாக வைப்பதுடன், இடய நோய் அபாயத்தை குறைக்கவும், ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்தவும் உதவுகின்றது.
செரிமான பிரச்சினைக்கு சிறந்த தீர்வாக நெய் இருக்கின்றது. வெறும் வயிற்றில் நெய் எடுத்துக் கொள்வதால் மலச்சிக்கல் தடுக்கப்படுவதுடன், குடல் ஆரோக்கியமும் மேம்படும். மேலும் இவை கூடுதலாக குடலின் அமிலத்தன்மையைக் குறைக்கிறது மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை அதிகரிக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |