நீரிழிவு நோயாளிகள் உணவில் தேங்காய் சேர்த்துக் கொள்ளலாமா?
நீரிழிவு நோயாளிகள் தங்களது உணவில் தேங்காய் சேர்த்துக் கொள்ளலாமா? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேங்காய்
தேங்காய் என்பது மாம்பழம், செர்ரி போன்ற பழங்களை உள்ளடக்கிய "ட்ரூப்" வகையை சேர்ந்த ஒரு பழமாகும். தேங்காயில் பி1, சி, போலேட் போன்ற வைட்டமின்களும், மாங்கனிஸ், பொட்டாசியம், காப்பர், செலினியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் இருக்கின்றன.
மேலும் இதில் லாரிக் அமிலம் போன்ற நடுத்தர தொடர் கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இது மோனோலாரினாக மாறுதல் அடைந்து, உடம்பில் தொற்றுக்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள், வைரஸ் கிருமிகளை அழிக்கும் திறனை அதிகரிக்கின்றது.
வெறும் 100 கிராம் தேங்காயில் 354 கலோரிகள், 15 கிராம் கார்போஹைட்ரேட், 33 கிராம் கொழுப்பு, 3 கிராம் , 9 கிராம் நார்ச் சத்து உள்ளது.
தேங்காயில் நிறைய நன்மைகள் இருந்தாலும் அதை நாம் எந்த வடிவில் எடுத்துக் கொள்கின்றோம் என்பதை பொறுத்தே நமக்கு குறித்த நன்மைகள் கிடைக்கும்.
நீரிழிவு நுாயாளிகள் பொரியலில் தேங்காயை துருவலை போட்டு சாப்பிடலாம். அதுவே சட்னியாக சாப்பிட்டால் குறைந்த அளவே சாப்பிட வேண்டும். தேங்காய் பால் போன்ற வடிவில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |