இரவில் படுக்கும் முன்பு ஒரே ஒரு ஏலக்காய் சாப்பிட்டு படுங்க... அதிசயத்தை காண்பீர்கள்
இரவு உணவிற்குப் பின்பு ஒரு ஏலக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஏலக்காய்
வீடுகளில் பயன்படுத்தப்படும் மருத்துவ குணம் நிறைந்த பொருட்களில் ஏலக்காயும் ஒன்று. இரவில் ஒரு ஏலக்காய் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றது.
சர்வதேச அளவில், ஏலக்காய் அதிக விலைமதிப்பு கொண்ட மசாலா பொருளாக விளங்குகிறது. அதன் சுவை, மணம் உள்ளிட்ட பண்புகளால், பானங்கள் முதல் இனிப்பு வகைகள் வரை தயாரிக்க ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது. ஏலக்காயில் உள்ள மருத்துவ குணங்களும் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்திய உணவு வகைகளுக்கு ஏலக்காய் மணம், சுவையை அளிப்பதோடு மட்டுமல்லாது, பல்வேறு மருத்துவ பயன்களையும் கொண்டுள்ளது.
ஆயுர்வேத மருத்துவத்தில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. வாயில் ஏற்படும் தொற்றுக்கள், தொண்டையில் ஏற்படும் பாதிப்புகள், மார்பு பகுதியில் ஏற்படும் சுணக்கங்கள், வாயு சம்பந்தமான கோளாறுகள், விஷக்கடி உள்ளிட்டவைகளுக்கு சிறந்த தீர்வு அளிக்கின்றது.
நன்மைகள் என்ன?
இது சுவாசத்தை மேம்படுத்துதல் உட்பட பல நன்மைகளைக் கொண்டுள்ளது.
செரிமானத்தை மேம்படுத்தி செரிமான பிரச்சனையை தீர்க்கின்றது.
வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதுடன், உடல் எடையையும் கட்டுப்படுத்த உதவுகின்றது.
இரவில் ஏலக்காய் சாப்பிடுவதால் வாய் புத்துணர்ச்சி தருகின்றது.
இது தொண்டையில் ஏற்படும் புண்களை ஆற்றுவதுடன், இருமலுக்கு சிறந்த தெரிவாக இருக்கின்றது.
இரவில் தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு சிறந்த தூக்கத்தை அளித்து ஆரோக்கியத்தை கொடுக்கின்றது.
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து கஷ்டப்படுபவர்களுக்கு ஏலக்காய் சிறந்த தீர்வு அளிக்கின்றது. இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்துவதற்கு இது உதவுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |