வெறும் வயிற்றில் இந்த இலை இரண்டு சாப்பிடுங்க - நோய் எதிர்பு சக்தி அதிகமாகும்
காலையில் எழநதவுடன் வெறும் வயிற்றில் இந்த மூலிகை இலை சாப்பிட்டால் உந்த நோயும் அண்ட முடியாத அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கும்.
வெறும் வயிற்றில் துளசி
பொதுவாக காலநிலை மாற்றத்தின் போது நமக்கு அடிக்கடி உடலில் தொற்று நோய்கள் உண்டாகும். இது பெரியவர்களுக்கு வருவது கொஞ்சம் தாங்க கூடியதாக இருக்கும்.
ஆனால் குழந்தைகளுக்கு இதை தாங்கி கொள்ள முடியாது. வைரஸ், பாக்டீரியா போன்ற நோய் தொற்றுப் பாதிப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்றால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வேண்டும்.
ஆனால் நீங்கள் நினைக்கலாம் இதற்கு ஊட்டச்சத்து உணவு சாப்பிட்டால் போதும் என்று.
ஆனால் இல்லை இதற்கு அவை ஒரு பக்கம் இருப்பினும் இன்னும் சில வழிகள் மூலமும் நாம் நொய் எதிர்ப்பு சக்தியை வலுப்டுத்தி கொண்டு வைத்துக்கொள்ளுதல் வேண்டும். இதற்கு காலையில் நாம் எழுந்தவுடன் துளசியை சாப்பிட்டால் போதுமாம்.
துளசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
நாம் காலையில் உழுந்தவுடன் ஒரு நான்கு ஐந்து துளசி இலைகளை மென்று சாப்பிடும் போது அதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், பைட்டோநியூட்ரியண்ட்ஸ் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
ஏற்கனவே காய்ச்சல், தொண்டைப்புண் பாதிப்பு உள்ளவர்கள் துளசியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை பருக வேண்டும்.
அப்படி பருகினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் நோயில் இருந்து பாதுகாக்படும். இது தவிர துளசியை அடிக்கடி சாப்பிட்டு இல்லை தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது வாய் துர்நாற்றம் நீங்குவதோடு, கண்பார்வை பிரச்சனை உள்ளவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
எப்படி சாப்பிடலாம்?
1.துளசியை பச்சையாக சாப்பிட பிடிக்காதவர்கள் 5 அல்லது 6 துளசி இலைகளை எடுத்து அதை தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். பின் அது கொஞ்சம் ஆறியவுடன் அதை வடிகட்டி தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்துக் குடிக்கலாம்.
இது துளசியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
2.அடுத்த முறை துளசி இலைகளை எடுத்து அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு ஒரு இரவும் முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின்னர் காலையில் வெறும் வயிற்றில் அதைக் குடித்து வரும் போது உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
