அதிகமாக உப்பு சாப்பிடுகிறீர்களா? உயிர் பத்திரம்... இந்த நோய் வாட்டி எடுக்கும்
உப்பு அதிகமாக சேரும் போது நமக்கு என்ன ஆபத்து வரும் என்பதை பதிவில் பார்க்கலாம்.
அதிகமான உப்பு
நாம் சமைக்கும் ஒவ்வொரு உணவிலும் உப்பு சேர்ப்போம். உப்பு சேர்ப்பதால் உணவின் சுவை கூடும். ஆனால் தற்போது இருக்கும் மோசமான உணவுப்பழக்கம் காரணமாக ஒருவர் அளவிற்கு அதிகமாக உப்பு சாப்பிடுகின்றனர்.
இது உடலில் விஷம் போல இறங்கும் என்பது யாருக்கு தெரியும். அதாவது அதிகமாக உப்பு சாப்பிடுவதால் அது அமைதியாக கொல்லும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இப்படி அதிகமாக உப்பு சாப்பிட்டால் உடலில் என்ன பிரச்சனை வரும் என்பதை விளக்கமாக பதிவில் பார்க்கலாம்.

அதிக உப்பு சாப்பிடுவதனால் ஏற்படும் பிரச்சனை
ஒருவேளை நாம் குறைவாக எப்பு சாப்பிட்டால் அது உடலில் உப்பு சத்தை குறைத்து தலைவலி, வயிற்று பிரட்டல், சோர்வு, தசை பிடிப்பு, குழப்பம், வலிப்பு, கோமா நிலை போன்ற பிரச்சனைகளை கொண்டு வரும்.
இதுமட்டுமல்லாமல் உப்பு உடலில் குறையும் போது அது மூளை செல்களையும் பாதிக்கும். கல் உப்பில் சோடியம் குளோரைடு உள்ளது. இது உடலில் நீர் சத்து, ரத்த அழுத்தம் இவற்றினை சீர்செய்யும்.

உப்பை சுத்திகரிப்பு செய்து தான் உணவில் பயன்படுத்துகிறோம். எனவே இதில் பொட்டாசியம், இரும்பு, கால்சியம் போன்ற தாதுக்களும் இருக்கிறது. இது தவிர உப்பில் இன்னும் பல நன்மைகள் இருக்கிறது.
ஆனால் உப்பில் எவ்வளவு நன்மை இருந்தாலும் அதை அதிகமாக சாப்பிடும் போது உப்பை அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் அது நம் அதிக அளவிலான பிரச்சனையை கொண்டு வரும்.
அதில் ஒன்று தான் உயர் ரத்த அழுத்தம். இது தவிர இதய நோய் வரும். சிறுநீரில் கற்கள் உருவாகும். இதுபோன்ற நோய் வந்தால் அது உயிருக்கே ஆபத்தாக அமையும்.

ஒருவர் ஒரு நாளைகடகு உவ்வளவு உப்பு சாப்பிட வேண்டும?
இதன்படி ஒரு நாளைக்கு வளர்ந்தவர்களே 2,300 மி.கி.க்கு குறைந்த அளவு உப்பை மட்டுமே எடுக்க வேண்டும் என கூறப்படுகின்றது. இது ஒரு ஸ்பூன் அளவாகும்.
ஆனால் நாம் உண்ணும் உணவில் மிக அதிகமாக உப்பு உள்ளது. எனவே ஊறுகாய் சிப்ஸ் போன்றவற்றை சாப்பிடுவதை குறைத்து கொள்வது நல்லது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |