முடி சும்மா காடு மாதிரி வளரணுமா? இந்த எண்ணெயை 7 முறை போடுங்க
இந்த கால கட்டத்தில் இருக்கும் பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி தலைமுடிப்பிரச்சனை ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது.
இந்த பிரச்சனைக்காக பலரும் பல இரசாயன பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் இவை தற்காலிக பலனை மட்டுமே கொடுக்கும்.
முடி உதிர்வையும் முடி வறட்சியையும் தடுத்து நல்ல முடி வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணெய் எப்படி செய்வது என்பதை பதிவில் பார்க்கலாம்.

முடி வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணெய்
இந்த எண்ணெய் செய்ய தேங்காய் எண்ணெய் - அரை லிட்டர், கறிவேப்பிலை - 1 கைப்பிடி, நந்தியாவட்டை பூ - 15, சங்குப்பூ - 10, செம்பருத்திப்பூ - 10, பாரிஜாத மலர் - 5, துளசி இலைகள் - 25,போன்ற பொருட்களை எடுத்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு இரும்பு பாத்திரத்தை எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். அந்த எண்ணையில் எடுத்து வைத்த பொருட்கள் அனைத்தையும் போட்டு கொள்ள வேண்டும்.

இதை 1 மணி நேரம் ஊற விட வேண்டும். நன்றாக ஊறிய பின்னர் அடுப்பில் வைத்து, குறைந்த தீயில் வைத்து சூடு படுத்த வேண்டும். எண்ணெய் நன்கு கொதிக்க வேண்டும்.
பின்னர் அடுப்பை அணைத்து எண்ணையை ஆறவிட வேண்டும். ஆறியபின் வடிகட்டி எடுத்து அதை வாரத்திற்கு முன்று முறை வைத்து குளிக்க வேண்டும். இப்படி செய்தால் சில நாட்களிலிலேயே தலைமுடி வளர்ச்சி நன்றாக இருககும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |