நீரிழிவு நோயினைக் கட்டுக்குள் வைக்க வேண்டுமா? பழங்களில் தோல் மட்டும் போதுமாம்
இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து, நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் பழங்களின் தோல்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
நீரிழிவு நோய்
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. ஒருவருக்கு ஒரு முறை நீரிழிவு நோய் வந்துவிட்டால், அதன் பிறகு அதை முற்றிலுமாக்க குணப்படுத்த முடியாது.
எனினும் ஆரோக்கியமான உணவுமுறை, வாழ்க்கைமுறை மற்றும் மருந்துகள் மூலம் இதை கட்டுக்குள் வைக்கலாம்.
நீரிழிவு நோய் இருக்கும் நபர்களுக்கு சோர்வு, பார்வை மங்கலாகுதல், எடை இழப்பு, பசி இழப்பு போன்ற பல அறிகுறிகள் ஏற்படும். சில எளிய, இயற்கையான வழிகளில் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கலாம்.
மேலும் சர்க்கரை அளவை குறைப்பதற்கு அன்றாட உணவில் பல விஷயங்களை சேர்த்துக் கொள்ளலாம். நீரிழிவு நோயைக் குறைப்பதில் சில பழங்கள் உதவியாக உள்ள நிலையில், சில பழங்களின் தோல்களும் சர்க்கரையின் அளவைக் குறைக்குமாம்.
இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து, நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் பழங்களின் தோல்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
சர்க்கரை அளவை குறைக்கும் பழ தோல்கள்
இனிப்பான பழங்களில் ஒன்றாக இருக்கும் மாம்பழமானது, அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளதால் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை ஏற்படுவதில்லை. ஆனால் மாம்பழத்தின் தோலை உட்கொள்வது சர்க்கரை அளவைக் குறைக்குமாம்.
Source: Pixabay
இதே போன்று ஆப்பிள் பழத்தின் தோலும், டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்திலிருந்து நம்மை பாதுகாக்கின்றதாம். ஆப்பிள் பழமும் சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக நன்மை அளிக்கின்றது.
கிவி பழத்தின் தோல் நீரிழிவு நோயாளிகளுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். அதன் தோல் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவுகிறது.
Source: Thinkstock Images
இதே போன்று பீச் பழத்தின் தோலும் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த ஆரோக்கியத்தை அளிக்கின்றது.
நீரிழிவு நோயாளிகளுக்கு வாழைப்பழத் தோலை உட்கொள்வது நன்மை பயக்கும். வாழைப்பழத் தோலில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் நார்ச்சத்து உட்பட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
Source: Thinkstock Images
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |