உடம்பில் நச்சுக்களை நீக்கணுமா? இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க
உடம்பில் நச்சுக்களை நீக்குவதற்கு நாம் அடிக்கடி சாப்பிட வேண்டிய உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நமது உடம்பு நச்சுக்கள் இல்லாமல் சுத்தமாக இருந்தால் மட்டுமே உள்ளுறுப்புகளும் சிறப்பாக செயல்படும். நாம் உண்ணும் உணவுகள், தண்ணீர், சுவாசிக்கும் காற்று ஆகியவற்றினால் நச்சுக்கள் உடம்பில் சேருகின்றது.
இவ்வாறு உடம்பில் நச்சுக்கள் அதிகமாக தேங்கும்போது உடல் உறுப்புக்களில் செயல்பாடு குறைவதுடன், உடம்பில் மெட்டபாலிச செயல்பாடுகளிலும் இடையூறு ஏற்படும்.

நச்சுக்கள் உடம்பில் அதிகரித்தால், மூளை மந்தம், நாள்பட்ட உடல் சோர்வு, செரிமான பிரச்சனை, சரும அழற்சி, உறுப்புகளில் அழுத்தம் இவைகள் அதிகரிக்கின்றது.
ஆகவே உடம்பில் சுத்தமாக வைப்பது மிகவும் முக்கியமாகும். தற்போது நச்சுக்களை நீக்கும் உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நெல்லிக்காய்
வைட்டமின் சி சத்துக்கள் அதிகமாக இருக்கும் நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிடவும். இதனால் உடம்பில் கழிவுகள் சேராமல் ஆரோக்கியமாக இருக்குமாம்.
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி ஒரு சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும். இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதுடன், சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கயத்தினையும், அழகையும் மேம்படுத்துகின்றது.
உடல் வலிமையாகவும், சுத்தமாகவும் இருக்க நினைத்தால் கட்டாயம் தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவது மிகவும் சிறந்ததாகும்.

சுண்டக்காய்
சற்று கசப்பு சுவையுடைய சுண்டைக்காயை வாரத்தில் ஒருமுறையாவது உடம்பில் சேர்க்க வேண்டும். இதனால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறுவதுடன், அல்சர் தொடர்பான பிரச்சனையும் குணமாகும்.
சுண்டைக்காயில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அதிகமாகவே உள்ளது. செரிமான பிரச்சனை சரிசெய்வதுடன், சர்க்கரை அளவை சமநிலையில் வைக்கவும் செய்கின்றது. ரத்த சோகையை தடுக்கவும் உதவுகின்றது.

அகத்திக்கீரை
துக்கம் நடந்த வீட்டில் மறுநாள் அகத்தி கீரையை சமைத்து சாப்பிட கூறுவது முன்னோர்களில் வழக்கமாகும். ஏனெனில் நோய் தொற்றுகள் பரவாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கின்றது.
மாதம் ஒருமுறை அகத்திக்கீரையை உணவில் எடுத்துக் கொண்டால் உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறி தொற்றுக்கள் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |