யாரெல்லாம் கத்தரிக்காய் சாப்பிடலாம் தெரியுமா? தெரிஞ்சுக்கோங்க
கத்தரிக்காய் ஒரு காய்கறி வகையாகும். இந்த கத்தரிக்காயில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இதில் புரோட்டீன்கள், நார்ச்சத்து, இரும்புசத்து, கால்சியம், சோடியம், பொட்டாசியம், சர்க்கரை, மாங்கனீசு, வைட்டமின் , கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், போன்ற சத்துக்கள் காணப்படுகின்றது.
இதில் அதிக நார்ச்சத்தும் நீர்ச்த்தும் நிறைந்துள்ளன. இந்த காய்கறியை யாரெல்லாம் சாப்பிட வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கத்தரிக்காய்
கத்தரிக்காய் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தக்கூடிய சக்தியை கொண்டுள்ளது. இதில் குறைவான கலோரிகள் காணப்படுவதால் இது உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்கும்.
இதன் காரணமாக உடல் எடையை கட்டுகோப்பாக வைத்திருப்பவர்கள் கத்தரிக்காயை உணவில் சேர்த்து கொண்டால் மிகவும் நல்லது.
உடல் சோர்வடையாமல் வேலைகளை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். இதில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து அதிகம் காணப்படுவதால் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும்.
ரத்த அழுத்தத்தை குறைக்ககூடியது இந்த கத்தரிக்காய். இது சருமத்தை மட்டுமல்லாமல் தலைமுடியையும் பாதுகாக்கிறது. அதன் வளர்ச்சிக்கும் பக்கெடுக்கிறது.
இதனால் சரும அழகை விரும்புபவர்கள் இந்த காய்கறியை எடுத்து கொள்ளலாம். கத்தரிக்காயை பிஞ்சாக சாப்பிடும் போது நமது நினைவாற்றல் அதிகரிக்கும்.
சிலருக்கு கத்தரிக்காய் சாப்பிட்டால் அரிப்பு ஏற்படும். இதன் காரணம் முற்றிய கத்தரிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஆனால் முற்றிய காயில் அதிகளவு வைட்டமின் ஏ உள்ளதால் அது உடல் வளர்ச்சிக்கு உதவும்.