தியானம் செய்ய தகுந்த நேரம் என்ன? எப்படி தியானம் செய்ய வேண்டும்?
தியானம் செய்வது மனிதர்களின் மனம் அமைதியை ஏற்படுத்தும் நிலையில், எந்த நேரத்தில் தியானம் மேற்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தியானம் செய்ய சிறந்த நேரம்
தியானம் செய்ய தகுந்த நேரம் பிரம்ம முகூர்த்தம் என்று கூறப்படும், காலை சூரிய உதயத்திற்கு முன்பு செய்வது முன்னோர்களின் அறிவுரையாக இருப்பதுடன், அப்பொழுது செய்தால் மனம் அமைதியாக இருக்குமாம்.
அதேபோல் சூரிய அஸ்தமனத்திற்கு பின் - பகல் வேலைகள் முடிந்து, மனம் ஓய்வெடுக்கும் நேரத்திலும் தியானம் செய்யலாம்.
ஏனெனில் தியானம் செய்வதற்கு அமைதியான சூழல் இருந்தால் மட்டுமே மனதை ஒருநிலைப்படுத்த முடியும். அதற்கு எந்த நேரம் உகந்ததாக இருக்குமோ அந்த நேரத்தினை தெரிவு செய்து தியானம் செய்ய வேண்டும்.
தியானம் செய்வது எப்படி?
தியானம் செய்வதற்கு முதலில் அமைதியான இடத்தினை தேர்வு செய்வதுடன், தரையில் அமர்வதற்கு வசதியான போர்வையை பயன்படுத்தவும்.
கண்களை மூடி, முதுகெலும்பை நேராக வைத்தும், கைகள் மடியில் அல்லது தொடையில் ஓய்வெடுக்கும்படியாக வைத்து செய்ய வேண்டும்.
சுவாசத்தை உள்ளே எடுப்பதையும், வெளியிடுவதையும் சரியாக உணர்ந்து கவனம் செலுத்தவும். மனம் அலைபாய்ந்தால், மெதுவாக அதனை சுவாசத்தின் மீது கொண்டு வர வேண்டும்.
தியானத்தை 5 நிமிடங்களில் தொடங்கி, படிப்படியாக 20 நிமிடங்கள் வரை அதிகரிக்கவும்.