தக்காளியை அதிகமாக சேர்த்துக் கொள்பவரா நீங்கள்? இந்த அதிர்ச்சி தகவல் உங்களுக்கே
உங்களது சமையலறையில் தக்காளில் இல்லாமல் உணவே முற்றுப்பெறாது, தக்காளியை மட்டுமே முக்கிய பொருளாக வைத்தும் ருசியான உணவுகளை செய்துவிடலாம்.
உடலுக்கு பல நன்மைகளை வாரி வழங்கக்கூடிய தக்காளியில், வைட்டமின் ஏ, கே, பி1, பி3, பி5, பி6, பி7 மற்றும் வைட்டமின் சி ஆகிய ஊட்டச்சத்துக்களும், பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் நிறைந்திருக்கின்றன.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை போன்று தக்காளி அளவுக்கு அதிகமானால் என்ன நடக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தக்காளி ஆபத்தை ஏற்படுத்துமா?
தக்காளியில் அமிலம் அதிகம் இருப்பதால் நெஞ்செரிச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம், செரிமானம் தொடர்பான பிரச்சனை இருப்பவர்களுக்கு இது சிக்கல்களை அதிகப்படுத்தும்.
இதேபோன்று சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் பொட்டாசியம் அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது, தக்காளியில் பொட்டாசியம் அதிகம் இருப்பதாலும், ஆக்சலேட் அதிகம் நிறைந்த உணவு என்பதாலும் சிறுநீரக நோயாளிகள் அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
குடலுக்கு அலர்ஜியை ஏற்படுத்தக்கூடிய பொருட்களில் தக்காளியும் ஒன்று, எனவே குடல் பிரச்சனை இருப்பவர்கள் அளவோடு எடுத்துக்கொள்வது சிறந்தது.
தக்காளியால் ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்களுக்கு, வாய், நாக்கு மற்றும் முகம் வீக்கம், அடிக்கடி தும்மல் போன்ற பிரச்சனைகள் வரலாம்.
ஒரு சிலருக்கு தீவிரமாக தோல் அரிப்பு கூட ஏற்படலாம், எனவே அளவுடன் எடுத்துக்கொண்டு மகிழ்வுடன் வாழ்வோமாக!!!!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |