Coconut Milk Massage: சுருள் முடியை நேராக்க தேங்காய் பால் மசாஜ்
பொதுவாக சிலருக்கு சுருட்டை முடி இருக்கும். இந்த முடிகொண்டவர்கள் நேரான தலைமுடி வேண்டும் என ஆசைப்படுவார்கள்.
இதனால் செயற்கையான கிரீம்களை பயன்படுத்தி தற்காலிகமாக நேராக்கிக் கொள்கிறார்கள்.
இவ்வாறு பயன்படுத்தும் பொருட்கள் கூந்தலுக்கு அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இந்நிலையில் வெளியில் பணம் கொடுத்து நேராக்க முடியாதவர்கள் வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு தலைமுடியை நேராக்கலாம்.
அப்படியாயின் வீட்டிலுள்ள பொருட்களை கொண்டு எப்படி சுருள் முடியை நேராக்கலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் காணலாம்.
சுருள் முடி இனி தேவையில்லை
1. பால் + தேங்காய் பால்+ தேன்
சுருள் முடிக் கொண்டவர்கள் தலைக்கு குளிக்கும் முன்னர் பால், தேங்காய்ப்பால், தேன் ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்து தலைக்கு தடவவும்.
சரியாக 1 மணிநேரம் தேங்காய் பால் கலவையை தலையில் ஊற விடவும். நேரம் சென்றதும் கழுவினால் சுருள் முடி பார்ப்பதற்கு நேரான தலைமுடி போன்று காட்சிக் கொடுக்கும். தலைமுடியை அலசும் போது பெரிய பற்கள் கொண்ட சீப்புக்களை பயன்படுத்துவது சிறந்தது.
2. பால் + முட்டை
பால் + முட்டை இரண்டையும் கிண்ணத்தில் கலந்து தலைக்கு தேய்த்து மசாஜ் செய்யவும். சரியாக 10 நிமிடங்களுக்கு பின்னர் திரவம் வலிவது போன்று தோன்றும். அப்போது நன்றாக தலைமுடியை பிழிந்து விட்டு, தலையுறை வைத்து தலைமுடியை கவர் செய்ய வேண்டும்.
சரியாக 15 நிமிடங்களுக்கு பின் தலைமுடியை கழுவினால் பார்ப்பதற்கு நேரான தலைமுடி போன்று காட்சிக் கொடுக்கும். முட்டையை தலைக்கு தேய்ப்பதால் தலைமுடி ஆரோக்கியம் பெறும்.
3. பால்
பாலை ஒரு போத்தலில் ஊற்றி அதனை தலைமுடியின் உச்சி முதல் நுனி வரை தெளித்து மசாஜ் செய்யவும். சிறிது நேரம் கழித்து கழுவினால் சுருள் முடி பார்ப்பதற்கு நேராக தெரியும். பாலில் இருக்கும் எண்ணெய்த்தன்மை முடிக்கு ஆரோக்கியம் கொடுக்கும்.
4. எண்ணெய் + சுடு தண்ணீர்
தலைக்கு குளிக்க முன்னர் தலைக்கு நன்றாக எண்ணெய் வைத்து மசாஜ் செய்து கொள்ளவும். இதற்கு பயன்படுத்தும் எண்ணெய் லேசாக வெப்பமேற்றுவது சிறந்தது.
பின்னர் சூடான தண்ணீரில் துண்டை நனைத்து அதனை தலையில் கட்ட வேண்டும். அரை மணி நேரம் அப்படியே வைத்து விட்டு ஷாம்பு போட்டு குளித்தால் தலைமுடியில் இருக்கும் சுருள் மெதுவாக நீங்கியது போல் காட்சிக் கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |