அடிப்பிடித்து கருகிப்போன பாத்திரத்தை எவ்வாறு சுத்தம் செய்வது?
சமைக்கும் போது பாத்திரத்தில் அடிபிடித்து கறையாகிவிட்டால் எவ்வாறு எளிதாக அகற்றலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக சமைக்கும் பாத்திங்கள் சுத்தமாக இருப்பதற்குத் தான் அனைவரும் விரும்புவார்கள். ஆனால் சில நேரங்களில் பாத்திரம் அடிபிடித்து கருகிவிடும்.
இதனை பலமுறை கழுவினாலும் அவ்வளவு எளிதாக அகற்ற முடியாது. அதற்கு சில ஈஸியான டிப்ஸ்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
அடி பிடித்த பாத்திரத்தை எவ்வாறு சுத்தம் செய்வது?
ஸ்நாக்ஸ் சாப்பிட பயன்படுத்தப்படும் தக்காளி சாஸை கொண்டு பாத்திரத்தில் படிந்திருக்கும் கறையை அகற்றலாம். கறை படிந்த பாத்திரத்தில் தக்காளி சாஸ் நன்கு தடவி இரவு முழுவதும் அப்படியே வையுங்கள். மறுநாள் காலையில் கழுவினால் கறைகள் நீங்கி பாத்திரம் பளபளப்பாக இருக்கும்.
கறை பிடித்த பாத்திரத்தில் எலுமிச்சை சாற்றை நன்கு தடவி அப்படியே வைக்கவும். பின்பு அதிலிருக்கும் அமிலம் கறையை கொஞ்சம் கொஞ்சமாக நீக்கும், பின்பு கழுவி எடுத்தால் பாத்திரம் சுத்தமாகும்.
உங்களது வீட்டில் ஒயின் இருந்தால் அதனை அடிப்பிடித்த பாத்திரத்தில் ஊற்றி சிறிது நேரம் ஊற வைத்து, பின்பு கழுவி எடுத்தால் கறைகள் நீங்கிவிடும்.
அடிப்பிடித்த பாத்திரங்களை சுத்தப்படுத்த பேக்கிங் சோடா உதவுகின்றது. பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து பேஸ்ட் போன்று கலந்து அதனை அடிப்பிடித்த பாத்திரத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால் கறைகள் நீங்கிவிடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |