காலிஃப்ளவரில் இப்படி ஒருமுறை கிரேவி செய்து சாப்பிடுங்க.. சுவை அட்டகாசமாக இருக்கும்..
அட்டகாசமான சுவையில் காலிஃபிளவர் கிரேவி எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக பலரது வீடுகளில் சப்பாத்தி, பூரி காலை மற்றும் இரவு உணவாக இருந்து வருகின்றது. சப்பாத்தி வைத்தால் அதற்கேற்ப கிரேவியை நிச்சயம் வைத்தே ஆக வேண்டும்.
ஒருமுறை காலிஃபிளவரில் கிரேவி வைத்து கொடுத்து பாருங்க... அடுத்து அதைத் தவிர வேறு எதுவும் வேண்டாம் என்றே சொல்வார்கள்.
தேவையான பொருட்கள்
காலி ஃபிளவர் - 300 கிராம்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
வெந்நீர் - தேவையான அளவு
மசாலா
அரைப்பதற்கு
முந்திரி - 5
மல்லி விதை - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன்
ஏலக்காய் - 2
கிராம்பு - 3
எள்ளு - 1 ஸ்பூன்
பட்டை - 1 சின்னது
வதக்க..
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1 ( பொடியாக நறுக்கியது)
பூண்டு - 5
இஞ்சி - சின்னது
தக்காளி - 2
எண்ணெய் - தேவையான அளவு
கிரேவி செய்வதற்கு..
சீரகம் - 3 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - தேவையான அளவு
தயிர் - 2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
செய்முறை
காலிபிளவர் கிரேவி செய்வதற்று காலிஃபிளவரை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பாததிரத்தில் போட்டு அதில் மஞ்சள், உப்பு, சூடான தண்ணீர் இவற்றினை சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் கழித்து தண்ணீர் இல்லாமல் எடுத்துக் கொள்ளவும்.
பின்பு கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து முந்திரி, மல்லி விதை, மிளகு, சீரகம், சோம்பு, ஏலக்காய், கிராம்பு, எள்ளு, பட்டை ஆகியவற்றை நன்கு வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, அதில் பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம், இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
தொடர்ந்து ஏற்கனவே வறுத்து அரைத்து பொடித்து வைத்திருந்த பொருளையும் அதனுடன் சேர்த்து ஐந்து நிமிடம் கழித்து சற்று வதக்கவும்.
பின்பு காலிஃபிளவரை அதனுடன் சேர்த்து நன்றாக பிரட்டி விடவும். பின்பு நன்றாக மசாலா சேர்ந்த பின்பு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, கிரேவி பதத்திற்கு வந்த பின்பு அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |